விமர்சனம்

இளசுகளின் எதார்த்தமான மனநிலையில்…. “காலங்களில் அவள் வசந்தம்” விமர்சனம் – 4/5

திரைப்படங்களைப் பார்த்து அதில் தோன்றும் காதா நாயகன்கள் போல் காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தோடு சுற்றித் திரியும் ஷியாம், அனுராதா என்கிற பெண்ணிடம் கொட்டும் மழையில் தனது காதலை சொல்லி சம்மதிக்க வைக்கிறான். பின்னர் வெளிநாட்டிலிருந்து தனது தந்தையின் நண்பர் குடும்பத்துடன் வருகின்றனர். அப்போது ராதே என்கிற பெண் ஷியாமை பார்த்ததும் காதல் வயப்பட்டு தனது காதலை வெளிப்படுத்தி திருமணமும் செய்து கொள்கிறாள்.

திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இன்பமாகவும் பிறகு ஊடல், கூடல் என நாட்கள் நகர்கிறது. ஷியாம் எப்போதுமே சொந்தமாக யோசிக்காமல் படங்களில் வரும் வசனங்கள் மற்றும் காட்சிகளின் பாதிப்பிலேயே, இதுதான் வாழ்க்கை என நினைத்து, அதை டைரியில் எழுதி வைத்து வாழ்ந்து வருகிறான். இது மனைவி ராதேவுக்கு தெரிந்து நீ நீயாக இரு, அது தான் எனக்கு பிடிக்கும் என சொல்ல மீண்டும் இருவருக்கும் பிரச்சினையாகிறது. இதனால் ஷியாம் ராதேவுடன் பேசாமல் இருப்பதால் அவனைத் தேடி அவனது அலுவலகத்திற்கு ராதே செல்லும் போது பழைய காதலி அனுராதாவும், ஷியாமும் நெருக்கமாக பேசிக்கொள்வதைப் பார்த்து கோபமடைந்து சண்டையிடுகையில் ஷியாம் மனைவியை கண்ணத்தில் ஓங்கி அடிக்க, ராதே அழுது கொண்டே கிளம்புகிறார்….. ஷியாம் மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்ந்தானா ? அல்லது காதலியை திருமணம் செய்து கொண்டு வாழ்கையை தொடர்ந்தானா ? என்பது மீதிக்கதை…..

இயக்குனர் ராகவ் மிதார்த் இன்றைய இளைஞர்களின் மனநிலையை அப்படியே காட்சிகளாகவும், வசனங்களாகவும் இளமை ததும்ப சொல்லியிருக்கிறார். திருமணமான புதிதில் கனவனைப் பிரிந்து ராதே வெளியூர் செல்லும் போது…. காதல் ததும்ப ஷாயாமின் சட்டையை கழற்றி எடுத்துச் செல்லும் போது… ஒவ்வொரு கனவன்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் போன்று படம் பார்ப்பவர்களை உணர வைத்துள்ளார் இயக்குனர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சிகளையும் காதலுடன், நகைச்சுவை கலந்து நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

படத்தில் நடித்துள்ள கௌசிக், அஞ்சலி நாயர், கிரோஷினி உள்ளிட்ட அனைவரும் அவரவருக்கு கொடுத்துள்ள பணிகளை அற்புதமாக செய்துள்ளனர். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அற்புதமான காதல் காவியத்தை பார்த்த திருப்தி படம் பார்க்கும் இளசுகளின் மனதில் தோன்றும் என்பது உறுதி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button