தமிழகம்

குளக்கரையை ஆக்கிரமித்து கால்பந்தாட்ட மைதானம் ! பாதுகாப்புக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் திறப்பு விழா நடத்தும் விகாஸ் சேவா டிரஸ்டை கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கூலிப்பாளையம் நான்கு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகரம் மற்றும் ஊத்துக்குளி வட்டத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய ஏரியான 440 ஏக்கர் பரப்பளவு கொண்ட நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து குளத்திற்கு அருகில் இயங்கி வரும் விகாஸ் வித்யாலயா பள்ளியை நடத்திவரும் விகாஸ் சேவா ட்ரஸ்ட் குளக்கரையில் இருந்து சாலை வரை நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை செய்து வந்தது. நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி, நில விற்பனையில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரிக்க கோரி நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் விகாஸ் வித்யாலயா பள்ளியின் சார்பில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கால்பந்து மைதானம் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் கால்பந்து மைதானம் திறப்பு அந்த இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் முயன்றனர். ஆனால் போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கூலிப்பாளையம் நான்கு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எந்தவித அனுமதியும் இன்றி நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் அமைத்துள்ள விகாஸ் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கால்பந்து மைதானத்தை அகற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க கோரியும் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button