தமிழகம்
உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எலையமுத்தூர் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை அமைந்துள்ளது. அதன் அருகே டாஸ்மாக் பாரில் சட்டத்திற்கு புறம்பாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவருவதால் கூட்டம் கூட்டமாக மது பிரியர்கள் அதிகாலையிலேயே வந்து செல்கின்றனர்.
மேலும் மது போதையில் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுவதாகும், அதிக அளவில் இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகி வருவதாகவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர். காவல்துறையினரும், மது கலால் பிரிவினரும் சட்டத்திற்கு புறமாக மது விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பான வகையில் மது விற்பனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.