பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால்… அச்சத்தில் மாணவர்கள், பெற்றோர்கள்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் ஊராட்சி கொம்பே கவுண்டன் துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 53 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளி செயல்படுவதற்காக திறந்த பொழுது பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து கிடப்பதை கண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அறிந்த பொது மக்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்… “சில மாதங்களுக்கு முன்பு தான் பள்ளியில் மேற்கூரை பராமரிப்பு பணி மற்றும் வண்ணம் பூசும் பணியும் நடைபெற்றது ஆனால் தற்பொழுது பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும்,மேற்கூரை இடிந்து விழுந்த நேரத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சமடைவதாகவும், “தெரிவித்தனர்.
பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மேற்கூரை சீரமைப்பு பணி மற்றும் வண்ணம் பூசுதல் பணி 2021-2022 ஆண்டில் 185000/- மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.