அறநிலையத்துறை இனை ஆணையர் உத்தரவை மதிக்காத பரம்பரை அறங்காவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?
நுங்கம்பாக்கம் APVP தேவஸ்தானதிற்கு சொந்தமான பல கோடி ருபாய் மதிப்புள்ள கோவில் சொத்தை மீட்டு எடுக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
நுங்கம்பாக்கம் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் குடி இருக்கும் வீடு APVP தேவஸ்தானதிற்கு சொந்தமானது, அதை கோயில் பட்டாச்சாரியார் ஆக்ரமித்துள்ளார், எனவே மேற்கண்ட நிலத்தை மீட்டு எடுக்க வேண்டும், என பல்வேறு நபர்கள் புகார் மனு அளித்ததை தொடர்ந்து, மேற்கண்ட தேவஸ்தான செயல் அலுவலர் நடவைடிக்கை எடுத்தார். உடனடியாக பரமபரை அறங்காவலர் அதை தடுத்து நிறுத்தி மேற்கண்ட தேவஸ்தான சட்டவிதிப்படி வழக்கு தொடரும் அதிகாரம் பரம்பரை அறங்காவலருக்கு மட்டுமே உள்ளதாக கூறி நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்தி விட்டார். அதன் பிறகு தொடர் புகார் மனுவால் அறநிலையத்துறை இணை ஆணையர் 02.08.2017 அன்று மேற்கண்ட கோவில் நிலத்தை மீட்டு எடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி பரம்பரை அறங்காவலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
உத்தரவு பிறப்பித்து 5 மாதம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், 2018 ஜனவரி மாதம் அறநிலையத்துறை இணை ஆணையர், மீண்டும் நினைவூட்டல் கடிதம் அறங்காவலருக்கு அனுப்பியுள்ளார். 20 மாதங்கள் ஆகியும் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கிரௌண்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட எவ்வித நடவடிக்கையும் அறங்காவலர் எடுக்க வில்லை. எனவே அறநிலையத்துறை இணை ஆணையர், மேற்கண்ட தேவஸ்தான அறங்காவலர்கள் மீதும், கோவில் சொத்தை மோசடி பத்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ள பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் மீதும் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு சொத்தை மீட்டு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கூறி வருகின்றனர்.