அனைத்து தேர்தலும் ரத்தாக வாய்ப்பு..? பலபேர் பதவியிழக்கும் அபாயம்! : நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்த உத்தரவு..!
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எத்தனைபேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து பல இடங்களில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை கூட்டுறவுசங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்றும், வெளிப்படையாக தேர்தல் நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எத்தனை பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்? என்பது குறித்து பிப்ரவரி 19 ஆம் தேதியன்று கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கலை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளலாமா? என்று கேட்ட நீதிபதிகள், வேட்புமனு தாக்கல், வாக்களித்தல் போன்றவற்றை வீடியோ பதிவு செய்ய வழிமுறைகள் உள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.