அரசியல்இந்தியா

10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தில் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதனையடுத்து வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கெனவே தெரிவித்தார். இத்திட்டம், ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப்படுகிறது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. முன்னதாக இம்மசோதா மீதான விவாதத்தில் ராஜ்யசபாவில் பங்கேற்று பேசிய கனிமொழி, 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button