தமிழகம்

இரண்டு பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 16 பேர் குற்றவாளிகள் : கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். இதில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார்.

இவர் அருகில் உள்ள இட்லிக்கடைக்கு பலகாரம் வாங்க சென்ற போது, அங்கு இட்லிக்கடை உரிமையாளரான செந்தில்குமார் மனைவி லட்சுமி என்ற தனலட்சுமி, அவரது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன்உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி தனது லீலை வெளியே தெரியாமல் இருக்க அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று, கட்டாயப்படுத்தி ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தார். தொடர்ந்து ஆனந்தராஜ் அந்த மாணவியை மிரட்டி, தனது நண்பர்களான திட்டக்குடியை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கும் விருந்தாக்கினார்.

தொடர்ந்து தனலட்சுமி 13 வயது மாணவியை மிரட்டி, அவரது தோழியான 14 வயது மாணவியையும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையாக்கினார். அதன்பிறகு அந்த மாணவிகளை தனலட்சுமி விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று விருத்தாசலத்தை சேர்ந்த அன்பு என்ற செல்வராஜ் மூலம் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்.

தொடர்ந்து தனலட்சுமி திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு 2 நாட்கள் மாணவிகளை அனுப்பி வைத்தாள். அதில் அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதேபோல் கலாவும், தனலட்சுமியும் சக புரோக்கர்களும் 2 மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் இருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 4-ந்தேதி நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார். அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகா என்ற மகாலட்சுமியும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரை மட்டும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 16 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து 16 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button