“சஞ்சீவன்” படத்தின் திரைவிமர்சனம்
தமிழ் திரையுலகில் ஸ்நூக்கர் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் “சஞ்சீவன்”. ஐந்து நண்பர்களுக்கிடையே வாலிப வயதில் நடைபெறும் நட்பு, காதல், கோபம் போன்ற சம்பவங்களை இயல்பாக காட்சிப்படுத்தி கலகலப்பாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
ஸ்நூக்கர் விளையாட்டில் வினோத் திறமையாக விளையாடி இறுதிப்போட்டியில் வெற்றி பெறுகிறார். இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என நண்பர்கள் விரும்புகின்றனர். அதே சமயம் அவரது காதலியும் அவர்களோடு கலந்து கொள்ள விரும்புகிறாள். ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்தி விட்டு, நண்பர்கள் ஐந்து பேரும் ஏற்காடு செல்கின்றனர்.
அப்போது காருக்குள் அவர்கள் ஒருவரையொருவர் கின்டலும்,கேலியுமாக பேசிக்கொண்டு கலகலப்பாக செல்கிறது அவர்களது பயணம். அப்போது விளையாட்டாக செய்யும் செயலால் விபரீதமான ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு என்ன நடந்தது ? என்பது மீதிக்கதை…
இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் காட்சிப்படுத்தியிக்கும் விதம் சிறப்பு. இதுவரை யாரும் சிந்திக்காத கதையை தேர்வு செய்து, அற்புதமாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் மணி சேகர். மலர் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது.