சினிமா

“வந்திய தேவன் மீது PCR வழக்கு” பதிவா..?.!

மரப்பாச்சி ,ஆண்கள் ஜாக்கிரதை ,படங்களை தயாரித்த “ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில், “வந்தியத்தேவன் மீது PCR வழக்கு, “அக்கினிப்பாதை :என இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது. அதில் ,” வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு” படத்தை ” ஒரு நடிகையின் வாக்குமூலம் ” ,படத்தை இயக்கிய ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார் .மற்றொரு படமான அக்னி பாதை, படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் இயக்குகிறார்.
படத்தின் கதை, வசனத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் எழுதுவதோடு, கதையின் நாயகனாகவும் நடிக்கிறார்.

” வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு ” படத்தைப் பற்றி இயக்குனர் ராஜ் கிருஷ்ணாவிடம் கேட்டபோது … கடந்த ஆட்சியில் ஒரு கல்வியாளன், ஒரு அரசியல்வாதியால் பந்தாடப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கியுள்ளோம். உலகில் கல்வி என்பது ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் அது அவனது ஏழு தலைமுறையை காக்கும். ஆனால் அந்த கல்வியை காசுக்கு விற்கும் அரசியல்வாதிகள் கல்வியாளனாக மாறி நடத்தும் அநியாயங்கள் பற்றிய உண்மை சம்பவம் இது என்றார் ராஜ் கிருஷ்ணா.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26 ஆம் தேதி தொடங்கி, ஒரே கட்ட படப்பிடிப்பில் முடித்து ஜனவரியில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜெம் பிக்சர்ஸின் அடுத்த படமான ” அக்னி பாதை ” படப்பிடிப்பை நவம்பரில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button