திருப்பூரில் பெட்ரோல் தட்டுப்பாடா,?! சிரமப்படும் வாகன ஓட்டிகள்.!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் பின்னலாடை தொழிலில் மாவட்டம் முழுவதிலும் சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொழில் நகரமான திருப்பூரில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே காலை பணிக்கு செல்வோர் அவசர அவசரமாக பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் நிரப்ப வாகனத்தை கொண்டு சென்றால் சாதா பெட்ரோல் ஸ்டாக் இல்லை என்கிற வார்த்தை தான் பெரும்பாலான பங்க் ஊழியர்களிடம் இருந்து வருகிறது. பவர் பெட்ரோல் இருக்கிறது என சுமார் 5.00 ரூபாய் அதிக விலை கொண்ட பெட்ரோல் தான் இருக்கிறது வேண்டுமானால் நிரப்பிக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் வரும். குறிப்பாக காலை நேரங்களில் அதிகமாக வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிரப்ப வரும் வேளைகளில் இது போன்று சாதா பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது போன்று தட்டுப்பாடுகளினால் லிட்டருக்கு 5 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் விலை அதிகமுள்ள பவர் பெட்ரோல் விற்பனை செய்வதற்காக சாதா பெட்ரோலுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறதா? என்பன போன்ற கேள்வி எழுகிற்து. சராசரியாக மாவட்டம் முழுவதும் ஒரு நாள் ஒன்றிற்கு 50 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் இது போன்ற பவர் பெட்ரோல் ஒரு.லிட்டர் நிரப்புவதால் ரூபாய் 2.50 லட்சமும் மாதத்திற்கு 75 லட்சமும் தோராயமாக கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. எனவே தொழில் நகரின் வளர்ச்சிக்கு உதவிட பெட்ரோல் நிறுவனங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை