விமர்சனம்

“நாட் ரீச்சபிள்” திரை விமர்சனம்

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆபத்தில் இருப்பதாக காவலன் செயலி மூலம் தகவல் வருகிறது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தவரின் புகைப்படத்துடன் தகவல்கள் வந்ததும் காவல் உதவி ஆய்வாளர் கயல் அந்த இடத்திற்கு செல்கிறார். ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடக்கிறாள். அந்த வீட்டின் அருகில் மற்றொரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது.

இந்த இருவரின் மரணத்தில் தடயங்களை சேகரிக்க காவல் ஆய்வாளர் விஷ்வா மாநகர காவல் ஆணையரால் நியமிக்கப் படுகிறார். ஏற்கனவே அங்கு இருக்கும் உதவி ஆய்வாளரின் கணவர் தான் இந்த விஷ்வா. இருவருக்கும் உரசல் இருக்கும் நிலையில் இருவரையும் இந்த வழக்கை விசாரிக்க ஆணையர் உத்தரவிடுகிறார்.

இந்த நிலையில் ஹேமா என்ற இளம் பெண் அடிக்கடி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் படுகிறார். அவளை கேராளாவில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் அவளது தாய். பிறகு வேலைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து செய்கிறாள் அந்தப் பெண். ஹேமாவைத் தேடி போலீஸ் அவளது வீட்டிற்கு வந்து அவளது அம்மாவிடம் விசாரணை செய்கிறார்கள். ஹேமாவிற்கும் நடைபெற்ற கொலைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதே மீதிக்கதை….

எதற்காக இந்த இரு கொலைகள் நடந்துள்ளன? யார் கொலையாளி? ஒருவருக்கொருவர் இவர்களுக்குள் என்ன தொடர்பு? என்பதை கிடைக்கும் தடயங்களை வைத்து விசாரிப்பதை நேர்த்தியான முறையில் யாரும் யூகிக்க முடியாதவாறு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.

காவலன் செயலி குறித்த முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, ஓரினச் சேர்க்கையாளர்களை இந்த சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது இந்த “நாட்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button