தமிழகம்

உணவு திருவிழாவில் பிரபலங்கள் பாராட்டைப் பெற்ற அண்ணா நகர் “விமலம் மெஸ்”

அண்ணா நகர் விமலம் மெஸ் சார்பாக மாபெரும் உணவு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவின் சிறப்பம்சமாக மங்களூரியன் உணவு வகைகள் அறுசுவையுடன் பரிமாறப்பட்டன .

ஜப்பான் கன்சுல் ஜெனரல் (தூதர்) டாகா மசாயுகி, டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ சி சண்முகம் மற்றும் தணிக்கையாளர் ராமலிங்கம், உள்ளிட்டோர் இந்த உணவு திருவிழாவில் கலந்துகொண்டு உணவின் ருசியையும், உபசரிப்பையும், ஏற்பாடுகளையும் வெகுவாக பாராட்டினார்கள்.

கலை உலக பிரபலங்கள் இயக்குனர் சுந்தர் சி, இயக்குனர் ராஜீவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகர் மோகன், டாக்டர் ஹரிஹரன், அபிஷேக், ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, பாடகி சௌந்தர்யா, பாடகர் க்ரிஷ், பார்வதி நாயர், விஜய் ஆதிராஜ் மற்றும் ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பாடகர் செந்தில் தாஸ் மற்றும் வயலின் கலைஞர் பத்மா ஷங்கர் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு பாராட்டியதோடு மட்டுமின்றி தங்கள் இசையாலும் அனைவரையும் பரவசப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிறப்பு உணவுகள் அடிப்படையில் இதுபோன்ற உணவு திருவிழா வரும் காலங்களில் நடைபெறும் என்று விமலம் மெஸ் உரிமையாளர் தியாக குறிஞ்சி செல்வன் மற்றும் அவரது மனைவி டாக்டர் விஜயலக்ஷ்மி தெரிவித்தனர்.

உணவிலும் உபசரிப்பிலும் பேரார்வம் கொண்ட விமலம் மெஸ் உரிமையாளர் குறிஞ்சி செல்வன் ஜப்பானிலும் வெற்றிகரமாக உணவகம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button