சேலத்தில் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக ஏற்பட்ட பிரச்சனையில் அடிதடி
சேலத்தில் ஜஸ்ட் வின் ஐ.டி. டெக்னாலஜி என்ற நிதி நிறுவனத்தின் கீழ் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் வேலூரைச் சேர்ந்த 3500 பேருக்கு மேல் பணம் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமார்ந்த குழுக்கள் சார்பாக இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் தங்களின் பணத்தை திருப்பித் தருவதாக வாக்குறுதி அளித்ததன் கீழ் பணம் கேட்டு நிதி நிறுவனத்திற்கு வந்துள்ளனர்.
இவர்களை நிதி நிறுவன அதிபர் பாலசுப்பிரமணியன் அடியார்களை வைத்து அடித்து துரத்தி உள்ளார். நிதி நிறுவனத்திற்கு உடந்தையாக காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் நிதி நிறுவன அதிபரை ஆட்டோவில் ஏற்றி தப்பிக்க வைத்துள்ளனர்.
இதில் அவர்களது அடியார்கள் பணம் முதலீடு செய்த வேலூரை சேர்ந்த நபர்களை தாக்கியுள்ளனர். இதனையடுத்து நாளை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட நபர்களை வரவழைத்து போராட்டம் நடத்தப் போவதாக சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்