தமிழகம்

பல்லடத்தில் ஏடிஎம் கொள்ளை முயற்சி… அலட்சியத்தில் வங்கி அதிகாரிகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவு நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் செட்டிபாளையம் பிரிவு அருகே பிரபல அரசுடமையாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் பிரபல தனியார் வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச்சென்ற வாடிக்கையாளர்கள் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்படிருந்த அறையில் செங்கல் கிடந்ததை கண்டனர். மேலும் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் வங்கி பாதுகாப்பிற்கு இரவு நேர காவலாளி பணியமர்த்தப்படாததும், வங்கியில் அசம்பாவிதம் நடந்தால் எச்சரிக்கை தகவல் வங்கி அதிகாரிகளுக்கு அளிக்கும் முறை பொருத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்த காவல் துறையினர் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டதில் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் முதியவர் ஒருவர் செங்கல்லை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்ச்சித்திருப்பதும், கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து அங்கிருந்து தப்பியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு பிரபல வங்கி ஏடிஎம் கொள்ளை முயற்சி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நள்ளிரவு நடந்த கொள்ளை சம்பவம் குறித்து செல்போனில் எச்சரிக்கை தகவல் வந்தும் எதனால் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்தனர்? தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறையை பயன்படுத்தி திட்டமிட்டு நள்ளிரவு கொள்ளைச்சம்பவத்தை கொள்ளையன் நிறைவேற்றினானா? எதனால் வங்கி ஏடிஎம் மிற்கு இரவு காவலாளி நியமிக்கப்படவில்லை? நள்ளிரவு நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் காவல் துறை தகவல் அளிக்கும் வரை வங்கி அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொண்டனரா? மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் போது கண்டிப்பாக கைதேர்ந்த கொளளையர்கள் இது போன்று கொள்ளையில் ஈடுபட வாய்ப்பில்லை.

இருப்பினும் நள்ளிரவில் பல்லடம் வங்கியில் கொள்ளை முயற்ச்சியில் ஈடுபட்டு அலறவிட்டும் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலை வரை குறட்டை விட்ட்டனாரா? என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. என்னத்தான் காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்கினாலும், வங்கிகளும் பாதுகாப்பை பலப்படுத்த இரவு நேர காவலாளிகளை நியமிக்க வேண்டும். நவீன தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி தகவல் அளித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வாடிக்கையாளர்களின் உடமைகளை பாதுகாக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button