சோலார் பிளாண்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்.
July 27, 2022
0 237 Less than a minute
பரமக்குடி அருகே பார்த்திபனூரில் அமையுள்ள சோலார் பிளாண்ட்க்கு நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அருங்குளம், மாங்குடி, புதுக்குடி, தேவனேரி உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவை விவசாயம் செய்யப்படுகிறது. இக்கிராமங்களை சுற்றி சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனம் சோலார் பிளாண்ட் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தி பணிகளை செய்து வருகிறது. சோலார் பிராண்ட் அமைப்பதற்கு கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார் தமீம் ராஜா, பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் சுதா, கிராம மக்கள் மற்றும் சோலார் பிளாண்ட் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சோலார் பிளாண்ட் அமைப்பதால் கிராமங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும், மேலும் தனியார் நிறுவனம் அரசு புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது, இதனை கைப்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோலார் பிளாண்ட் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவசாயிகளின் கருத்துக்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.