எடப்பாடி நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கைகலப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருபத்தி ஒரு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. தீர்மானங்களை வருவாய் அதிகாரி வாசித்துக் கொண்டிருந்தார். பூலாம்பட்டி நீரேற்று நிலையத்தில் வைக்கப்பட்ட மோட்டார் பைப்புகள் பொருத்துவதற்கான தீர்மானங்கள் வாசித்த பொழுது அதிமுக கவுன்சிலர் முருகன். தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வரவு செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என கேள்வி கேட்டபோது வருவாய் ஆய்வாளர் குமரகுருபரர். தொடர்ந்து தீர்மானங்களை படித்து வந்தார்.
அதிமுக உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் தொடர்ந்து தீர்மானங்கள் படிக்க கூடாது என வருவாய் ஆய்வாளரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகர்மன்றத் தலைவர் பாஷா. எழுந்துவந்து கவுன்சிலர் முருகனை, அவரது மார்பின் மீது கை வைத்து கீழே தள்ளி விட்டுள்ளார். நகர்மன்ற தலைவரின் அராஜகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டரங்கில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது தெருவிளக்குகள் சரி செய்யவில்லை, சாக்கடை தூர்வார வில்லை என பல்வேறு கோசங்களை எழுப்பினர். இதனால் எடப்பாடி நகர்மன்ற அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.