காயல் நகர ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு வழங்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணம் பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 2015 ம் ஆண்டு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மூண்ணுறுக்கும் மேற்பட்டோர் கலந்து முன்னால் ஆட்சியாளர் ரவிகுமார் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கபட்டது. இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
காயல் பட்டிணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்து கண்டறிய வேண்டும் ஆய்வுக்கு சிறப்பு அதிகாரியாக வருவாய் கோட்டாச்சியாளர் அவர்களின் தலைமையில் ஆய்வு நடத்த பட வேண்டும். அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
எனவே, காயல் பட்டிணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர்களுக்கும்.
சொந்த வீடு இல்லாமல் வாடகை விட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.