தமிழ்நாடுபைபர் நெட் கார்பரேசன் நிறுவனம்மூலம் 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள்,121 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் அனைத்தையும் கண்ணாடி இழை கட்டமைப்பு(Optic Fibre Infrastructure) மூலம் இணைக்க கோரப்பட்டடெண்டரில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்பு மற்றும்கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நமது குழுவினர் விசாரித்துகடந்த பிப்ரவரி 1-15 இதழில் இதுசம்பந்தமாக விரிவானசெய்தியை வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடுஅரசின் தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன்நிறுவனம் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளைக்கொண்டு 08.06.2019 ல் மத்திய அரசின்Ministry Of Corporate Affairs(MCA) வில் ரூ50 லட்சம் முதலீடு செய்து பதிவுசெய்யப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை தமிழ்நாடு அரசு ஆகியவற்றிற்கும் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் முதல்வர்எடப்பாடி தலைமையில் பறிமாறிக் கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிவேகஅலைக்கற்றை மற்றும் தடையில்லா இண்டர்நெட்இணைப்புக்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்த ரூ2411 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
மத்திய அரசின் பாரத்நெட் திட்டம், மாநில அரசின் தமிழ் நெட் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த டிஜிட்டல் உருவாக்கப்படும். இத்திட்டம் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று 24.09.2019 இல் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக சந்தோஷ் பாபு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகுரூ 2411 கோடிக்கான டெண்டர் பேக்கேஜ் ABCDஎன நான்காக பிரித்து 6.12.2019 இல்டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டருக்கான பிரிபிட்மீட்டிங் 23.12.2019 ல் நடப்பதாக இருந்தது.ஆனால் 20.12.2019 அன்று பிரிபிட் மீட்டிங்ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் தான் மேலாண்மைஇயக்குனர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ்&க்கும், அமைச்சர் உதயகுமாருக்கும்மோதல் உருவாகி இருக்கிறது. டெண்டரில்கமிஷன் பெற அமைச்சர் உதயகுமார்மற்றும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள்விரும்புகிறார்கள் என தனது கருத்தைவெளிப்படையாக தெரிவித்ததோடு அமைச்சர் உதயகுமாரிடம் எனக்குத் தெரியாமல் Pre-Bid Meeting 23.12.2019 ரத்துசெய்யப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டு முறையிட்டிருக்கிறார். அதற்கு அமைச்சர்உதயகுமார் அதெல்லாம் எனக்குத் தெரியாது வேண்டுமானால் முதல்வர் எடப்பாடியிடம் கேட்டுக்கொள் என்று அலட்சியமாக பதில்சொல்லியிருக்கிறார். அதன்பிறகு டெண்டரில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துபோடவேண்டும் என்று சந்தோஷ்பாபு ஐஏஎஸ்ஐ மிரட்டினாராம் அமைச்சர்.டெண்டரில் ஒருபோதும் முறைகேடு நடக்க அனுமதிக்க மாட்டேன்என்று கூறிவிட்டு அமைச்சர் அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி.
இந்த விவகாரம் எடப்பாடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் ரூ 2411 கோடி டெண்டரில் முறைகேடு நடப்பதற்கு பேரம் பேசப்படுவதாக புகார் தெரிவித்திருக்கிறார். தலைமைச் செயலாளர் சண்முகமோ இந்த விவகாரத்தில் முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ் இதன் பின்னணியில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க இயலாத சூழ்நிலையில் சந்தோஷ்பாபு ஐஏஎஸ்&யை விருப்ப ஓய்வில் செல்லுமாறு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் தான் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் மாற்றப்பட்டார்.
அதன்பிறகு தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு 2019-ல் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்ற ஐஏஎஸ்லேயே ஜூனியர் அதிகாரியான டி.ரவிச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவர் மாவட்ட ஆட்சித் தலைவராகக் கூட பணியாற்றிய அனுபவம் இல்லாதவர்.
தமிழ்நாடு டெண்டர் டிரான்ஸ்பரன்சி சட்டம் 1998ன் படி டெண்டர் கோரப்பட்ட நாளில் இருந்து 15 நாட்கள் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் டெண்டர் திறக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் 45 நாட்கள் எடுத்துக் கொண்டால் கூட 21.01.2020ல் டெண்டர் திறக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டத்தை மதிக்காமல் டெண்டர் தேதியை 21.02.2020 வரை நீட்டித்தார்கள். இந்த டெண்டர் விவகாரத்தில் கமிஷன் கொடுக்கும் நிறுவனத்திடம் பேரம் பேசி லஞ்சம் வாங்குவதற்காகவே டெண்டர் விதிமுறைகளை மீறி டெண்டர் தேதியை நீட்டித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஆகையால் இந்த டெண்டரை இரத்து செய்ய வேண்டும். இதன் பின்னணியில் அமைச்சர் உதயகுமார், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தப் புகாரை விசாரித்த அதிகாரிகள் தமிழக தலைமைச் செயலாளர், தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அதிகாரிகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அதில் பொது கொள்முதல் விதிகளை பின்பற்றாமல் தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும். இந்த புகார் மனுவை ஆய்வு செய்து அதில் முறைகேடு இருந்தால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். மேலும் நிலைக்குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் கொண்டு வருவதற்கு வசதியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டும்.
புகாரில் கூறப்பட்டுள்ள குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரி நிவர்த்தி செய்யும் வரை ரூ 2411 கோடிக்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “டெண்டர் விதிமுறை மீறல்கள் நடக்கவில்லை என்று பொய்யும் புரட்டும் மிகுந்த அறிக்கைளை வெளியிட்டு ஊழலை மறைத்து இந்த முறைகேடுகளுக்கு காரணமான அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து மாநில லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என தமிழக கவர்னரை கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
– சூரியன்