ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சமூக விரோதிகள் சிலர் உள்ளே நுழைந்து, மேடையை நோக்கி செருப்புகளை வீசிசியும், திராவிடர் கழகத் தோழர்கள் மீது கற்களை வீசியும் நடத்திய தாக்குதலில் இருவரின் மண்டை உடைந்து இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது இத்தகை செயல் மனித நேயமற்ற செயலாகும்.
தேர்தல் பிரசாரம் செய்து வரும் தலைவருகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
எனவே இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமெனவும் கி.வீரமணி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.