அதிக முறை இரத்தானம் செய்தமைக்காக முதலமைச்சர் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஷேக் சதக்கத்துல்லாஹ் மற்றும் அவரது மகன் ஷேக் சம்சுதீன் ஆகிய இருவரும் அதிக முறை இரத்தானம் ( ஏ.பி. நெகடிவ் ) செய்ததற்காக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
ஷேக் சதக்கத்துல்லாஹ், அவரது மகன் ஷேக் சம்சுதீன் ஆகிய இருவரும் அரிய வகை இரத்தமான ஏ.பி.நெகட்டிவ் வகை இரத்தத்தை அதிக முறை தானம் செய்துள்ளனர். சதக்கத்துல்லாஹ் இதுவரை ஐம்பது முறைக்கும் மேல் இரத்தானம் செய்துள்ளார். அவரது மகன் ஷேக் சம்சுதீன் பத்து முறைக்கு மேல் இரத்தானம் செய்துள்ளார். இவர்கள் தற்போது சென்னை மன்னடியில் வசித்து வருகின்றனர்.
விபத்து மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஏ.பி.நெகட்டிவ் வகை இரத்தம் தேவைப்பட்டால் இவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டி, இவர்களே தொடர்பு எண்களை மருத்துவ மணைகளில் கொடுத்து வைத்துள்ளனர்.
ஷேக் சதக்கத்துல்லாஹ், ஷேக் சம்சுதீன் தந்தை, மகன் இருவரும், தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்பதை உணர்ந்து தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார்கள். ஆகையால் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.