ஆவடி மாநகராட்சி கவுன்சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டம்
ஆவடி மாநகராட்சியின் 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சத்யா கோ.ரவி, மாமன்ற உறுப்பினராக பதவியேற்ற குறுகிய காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காரணத்தால் சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் இவரது சேவையைப் பாராட்டி இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் சார்பில், குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் நிறுவனத்தின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆவடி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் சத்யா கோ. ரவிக்கு கௌரவ டாக்டர் பட்டமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார்.
இதேபோல் ஆவடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாஃபர் பேரிடர் காலங்களில் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் ஊரடங்கு சமயத்தில் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார். இவரது சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் சிறந்த சமூக சேவகர் என்ற விருது வழங்கி கௌரவித்துள்ளது.