ஒவ்வொரு வருடமும் மே 18-ம் தேதி, உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எச்.ஐ.வி- யைத் தடுக்கும் தடுப்பூசியின் அவசர மற்றும் அவசிய தேவையை மக்களுக்கு உணர்த்துகிறது. உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை எச்.ஐ.வி தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு நாள் என்றும் அழைக்கலாம்.
தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடர்ந்து, எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி வருகின்றனர்.
உலகளவில் இன்று சுமார் 3.8 கோடி பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. வைரஸ் பல வழிகளில் பரவும். இந்த நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் எய்ட்ஸ் பற்றிய தவறான கருத்துகள் பரவி வருகின்றன.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தில், எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் மற்றும் எய்ட்ஸ் / எச்ஐவி குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
- எய்ட்ஸ் நோய்க்கான அபாயத்தைக் குறைக்க அருகில் உள்ள பாலியல் சுகாதார மருத்துவரிடம் அடிக்கடி ஆலோசனை பெறுவது நல்லது.
- எய்ட்ஸ் குறித்த அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்க வேண்டாம். அவ்வப்போது வழக்கமான இரத்த பரிசோதனை செய்து, எய்ட்ஸ் நோயை கண்டறிய முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
3.எய்ட்ஸ் பரவுவதைத் தவிர்க்க எப்போதும் பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வது நல்லது. மேலும், எச்.ஐ.வி சோதனை பற்றி உங்களது துணையிடம் கூறி, செக்ஸ் வைத்துக்கொள்ளும் முன்பு சோதனை செய்துக் கொள்வது நல்லது.4. ஊசிகள் அல்லது வேறு ஏதாவது மருத்துவம் சார்ந்த உட்செலுத்துதல் சாதனங்களை எப்போதும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இதுவும் எய்ட்ஸ் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும். - உடலில் அடிப்பட்ட ரத்தத்தை எப்போதும் நேரடியாக தொடாமல் கையுறைகள் பயன்படுத்துவது நல்லது.
- எச்.ஐ.வி. பாசிட்டிவ் பெண்கள் சிசெரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. மேலும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு பதிலாக வேறு முறைகளை பின்பற்றவேண்டும்.
- எச்.ஐ.வி வைரஸ் எளிதில் தொற்றக் கூடியவர்களாக்க பாலியல் தொழிலாளர்கள் அல்லது எச்.ஐ.வி-பாசிட்டிவ் உள்ள ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், எச்.ஐ.வி தொற்றுநோயை தடுக்க தினமும் மருத்துவரின் அறிவுறுத்தலுடன் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். இது PrEP அல்லது Pre-exposure prophylaxis என்று அழைக்கப்படுகிறது.