ஆன்லைன் கந்துவட்டியைத் தோலுரிக்கும் முதல் படம் “RAT”
பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆம்ரோ கிங்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாத் துறையில் ஆம்ரோ சினிமா என்ற பெயரில் கால் தடம் பதிக்கிறது. அதன் முதல் படைப்பாக டிஜிட்டல் கந்துவட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக, பெரும் பொருட்செலவில் “RAT” என்கிற படம் உருவாகிறது.
விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன. தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் – எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுக் தற்கொலை செய்துகொள்வது தெரியவரும். இது உண்மையில் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகவே மாறிவருகிறது. இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது? அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா ? இல்லையா? என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான் RAT.
ஆம்ரோ சினிமா நிறுவனம் முதல் படைப்பாக ஸ்ரீ பா.ராஜராஜன் வழங்கி அதை திருமதி முத்துலெட்சுமி ராஜராஜன் அவர்கள் தயாரிக்கிறார். இதை இயக்குபவர் அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கட் இவர் சசிகுமார் ,அட்டகத்தி தினேஷ் படத்தில் நாயகியாக நெட்பிளிக்ஸ்காக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் சாயா தேவி நடிக்கிறார் சாயா தேவி போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த கன்னிமாடம் படத்தின் நாயகி இவர் இவர்களைத் தவிர கன்னிகா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர் .