தமிழகம்

600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம் வீடியோ : சென்னை எஞ்சினியர் சிக்கியது எப்படி?

பிரபல ஸ்டார் ஓட்டலான ரேடிசன் ப்ளூ மற்றும் குயிக்கர் இணையதள பெயரை பயன்படுத்தி, நாடு முழுவதும் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600 இளம் பெண்களின் ஆடையின்றி ரசித்த சென்னை ஐ.டி. ஊழியரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

படித்த நுனிநாக்கு ஆங்கிலம் பேசக்கூடிய 600 இளம் பெண்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டி நிர்வாண படத்தை பறித்து ரசித்த குரூர சைக்கோ டெக்கி இவர்தான். 600 பெண்கள் இவரிடம் ஏமாந்தது எப்படி? எதற்காக பெண்களின் நிர்வாணப் படங்களை வாங்கினார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய ஆபாச படங்களை வைத்து இளைஞர் ஒருவர் மிரட்டி பணம் பறித்ததாக மியாபூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரை விசாரித்த போலீசார், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் கிளமெண்ட் ராஜ் எனற பிரதீப்பை கைது செய்தனர்.
அவர் பயன்படுத்தி வந்த மொபைல் போன் ஒன்றும் இரண்டு சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் திருமணம் ஆனவர். சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனமான டிசிஎஸ்சில் பணியாற்றி வந்தார்.
மனைவி பகல் நேர பணிக்கு வேலைக்கு செல்ல பிரதீப் இரவு பணிக்கு சென்றுள்ளார். இதனால் கணவன்-&மனைவி இடையே நெருக்கமான உறவில்லை. இதனால் பாலியல் தேவைக்காக ஏங்கி வந்த பிரதீப், அதை தீர்த்துக்கொள்ள குரூரமான முடிவை எடுத்துள்ளார்.
அதற்காக பிரபல வேலைவாய்ப்பு இணையதளமான குயிக்கர் டாட் காமில் பதிவு செய்த பெண்களை குறி வைத்துள்ளார்.
அதில் வேலைக்காக போன் நம்பருடன் பதிவு செய்த பெண்களை தேடி எடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக பைவ் ஸ்டார் ஓட்டல்களில் வரவேற்பாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களை குறிவைத்துள்ளார்.

அவர்களை தொடர்பு கொண்டு பிரபல ஸ்டார் ஓட்டலான ரேடிசன் ப்ளூ ஓட்டலின் ஆள் தேர்வு செய்யும் குழுவிலிருந்து பேசுவதாக ஏமாற்றியுள்ளார். பிரதீப்.
நுனி நாக்கு ஆங்கிலத்தில் அந்த பெண்களிடம் உரையாடி, எந்த அளவிற்கு அந்த வேலைக்கு செல்ல ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வார்.
அதீத ஆர்வம் கொண்டவர்களை கண்டுபிடித்து, அவரிகளிடம் ஹெச்.ஆர். செக்சனில் இருந்து அர்ச்சனா ஜெகதீஷ் என்பவர் உங்களை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டு நேர்காணல் நடத்துவார் எனக்கூறி இணைப்பை துண்டித்து விடுவார்.
பின்னர் ஓரிருநாள் இடைவெளிவிட்டு அர்ச்சனா ஜெகதீஷ் என்ற பெயரில் பிரதீப்பே மற்றொரு எண்ணிலிருந்து வாட்ஸ் ஆப் மூலமாக அந்த பெண்ணை தொடர்பு கொள்வார்.
முதலில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கேட்பார். பின்னர் புல் சைஸ் போட்டோ கேட்பார். அதனை பெற்றுக்கொண்டு முதல் ரவுண்டு இன்டெர்வியூ முடிந்து விட்டது பின்னர் அழைப்பதாக கூறுவார்.

பின்னர் இரண்டாவது ரவுண்ட் இன்டர்வியூ எனக்கூறி வாட்ஸ் ஆப்பில் அரச்சனா ஜெகதீஷ் பெயரில் பிரதீப் மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொள்வார்.
தங்கள் ஓட்டலில் வரவேற்பாளர் பணிக்கு உடல் கட்டமைப்பு அவசியம் எனவும், எனவே உங்கள் ஆடைகளை களைந்து உடலின் முன்பக்கம் மற்றும் பின்பக்க நிர்வாணப் படங்களை அனுப்புமாறு அந்த பெண்களை பிரதீப் கேட்பார்.
பிரதீப் கூறுவதை கேட்டு எதிர்முனையில் உள்ள பெண்கள் சற்று அதிர்ந்து போவார்கள். லாவகமாக பேசி இது ஸ்டார் ஹோட்டல்களில் வரவேற்பறைக்கு ஆள் எடுக்கும் போது கடைபிடிக்கும் சாதாரன நடைமுறைதான் என்றும், இந்த புகைப்படங்கள் ரகசியம் காக்கப்படும், தங்கள் ஹோட்டல் பிரபலமானது, நம்பகத்தன்மை வாய்ந்தது என நம்பும் வகையில் பேசி நிர்வாண படங்களை வாங்கிவிடுவார்.

அதன் பின்புதான் பிரதீப் தனது வேலைகளை காட்டத் தொடங்குவார். வீடியோ கால் மூலம் நிர்வாண படம் அனுப்பிய பெண்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் பிரதீப் மிரட்டத் தொடங்குவார். ஒரு கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என அந்த பெண்கள் கெஞ்சிக் கேட்கும்வரை விடமாட்டார்.
பின்னர், அவர்களின் ஆடைகளை ஒவ்வொன்றாக களையச்சொல்லி, லைவாக வீடியோ காலில் பார்த்து ரசிக்கும் குரூர சைக்கோ பிரதீப் என்கின்றனர் காவல்துறையினர். அந்த வீடியோக்களை அவர் தனது மொபைலில் பதிவும் செய்தும் வைத்துள்ளார்.
இப்படி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா, டெல்லி, உத்தர பிரதேசம் உட்பட இந்தியாவின் 16 மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களை ஏமாற்றி ஆடைகளை களைந்து அவர்களின் வீடியோக்களை தமது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார் பிரதீப். அந்த படங்களை வைத்து ஏமாந்த பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணமும் பறித்துள்ளார்.

இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மனைவி பார்த்துவிடாமல் இருக்க தனது மொபைலில் தனியாக பாஸ்வேர்டு உருவாக்கி சேமித்தும் வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார், பெண்களின் ஆபாச படங்களை பதிவு செய்து வைத்திருந்த மொபைல் போன் மற்றும் பெண்களை தொடர்பு கொள்ள பயன்படுத்திய 2 சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

இரவுப் பணியால் எந்திரத்தனமான வாழ்க்கை, மனைவி உடன் முழுமையான தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத நிலை என ஐ.டி. வேலை தடுக்க, தனது தொழில்நுட்ப அறிவையே பாலியல் ஆசையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இணையதளங்களில் வேலைக்காக பதிவேற்றம் செய்யும் பெண்களை தொடர்பு கொள்பவர்களிடம் அதீத எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது இந்த சம்பவம்.

சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button