சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளருக்கு ஜெம் ஆப் இந்தியா விருது

ஆல் இந்தியா அச்சீவர்ஸ் கவுன்சில் மற்றும் அகில இந்திய சாதனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளருக்கு ஜெம் ஆப் இந்தியா விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரிகை துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலகட்டங்களில் பல இடையூறுகளுக்கு மத்தியில் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் மூத்த பத்திரிகையாளரும், முன்னணி வார இதழின் தலைமை செய்தியாளருமான முனைவர் சிராஜூதின் ஆல் இந்தியா அச்சீவர்ஸ் கவுன்சிலின் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவருக்கு விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விழாவில் மத்திய சட்டம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு சிங்பால் சிராஜூதினை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் டெல்லி பிஜேபி மாநிலத்தலைவர், ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.