Featuredதமிழகம்தமிழகம்

மாயூரம் வேதநாயகத்திற்கு மணிமண்டபம்..!

இந்தியாவின் முதல் தமிழ் நீதிபதியும், முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மயிலாடுதுறையின் முதல் நகர்மன்ற தலைவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழறிஞர் என பன்முக ஆற்றல் பெற்றவர்.

தரங்கம்பாடியில் உரிமையியல் நீதிபதியான அவர் 11.10.1826 ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் பெரும் புலமை பெற்றவர். 1857 ஆம் ஆண்டு தனது 31 ஆவது அகவையில் நீதிபதியாக பதவியேற்றார். 1858 ஆம் ஆண்டு சீர்காழிக்கு மாற்றலாகி 1860 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பணி நிறைவு வரை அங்கேயே பணியாற்றி வாழ்ந்தவர். அன்றைய ஆட்சியாளர்களான பிரிட்டிஷ்காரர்களின் கீழ் பணியாற்ற வேண்டி இருப்பினும் “நான் அவர்களுக்கு என்றும் அடிமை இல்லை“ என்கின்ற கம்பீரம் நிறைந்த குணமே ஆங்கிலேயர்கள் பலர் இவரை நேசித்ததும் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு நிகராக ஆங்கில அறிவுத்திறன் கொண்டவராக பணியாற்றினார்.

இவர் மறுமலர்ச்சி கவிஞர், புரட்சிகர எழுத்தாளர். 1873 ஆம் ஆண்டு மக்கள் சேவை செய்ய அரசியல் அதிகாரத்தில் மயிலாடுதுறை முதல் நகர் மன்ற தலைவர் பதவியேற்று மக்கள் சேவகனாக வாழ்ந்தவர். பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய இவர் சுகுணசுந்தரி, பெண்கல்வி, பெண்மானம், பெண் மதிமாலை, பொம்மை கல்யாணம், திருவருள்மாலை, திருவருள் அந்தாதி, தேமாதா அந்தாதி, சர்வசமய கீர்த்தனைகள், 1850 ஆம் ஆண்டு முதல் 1861 ஆம் ஆண்டு வரை சில பிரதான தீர்ப்புகளை உள்ளடக்கி ஏராளமான நூல்களை எழுதியவர். பெண் அடிமைக்கு எதிராகவும், பெண் கல்வி குறித்து கவிதை, மற்றும் பல்வேறு இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இவர் 1876ஆம் ஆண்டு முதல் 1878 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் போது தனது சொத்தை விற்று மயிலாடுதுறையில் பல இடங்களில் கஞ்சி தொட்டி நிறுவி வாடிய மக்களின் பசியை தீர்த்த வள்ளல் மனம் கொண்ட மாமனிதர், பெண்களுக்காக முதல் கல்வி கூடத்தை ஏற்படுத்தி சாதித்து காட்டியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மக்கள் போற்றிய மகத்தான நீதிபதியாக, இலக்கிய மேதையாக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட எழுச்சிமிகு கவிஞராக வாழ்ந்த இவர் 1889 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் சிறை சித்தமாய் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திலே அவருக்கு சிலை நிறுவப்பட்டிக்கிறது.

மகத்தான இம்மனிதரின் புகழ் காக்கவும் வருங்கால தலைமுறைகள் இவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் மயிலாடுதுறையின் பிரதானமான ஓர் இடத்தில் மணிமண்டபமும், இறுதியாக பணியாற்றிய நீதிமன்ற வளாகத்தில் சிலையையும் நிறுவி அவரது பிறந்த நாள், நினைவு நாள், இருநாளும் இனிவரும் காலங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டுமென தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக தமிழுக்கு தொண்டு செய்யும். தமிழ் சமூக அறிஞர் பெருமக்களுக்கு தகைசால் பெருமை சேர்க்கும் தளபதியான தமிழக முதல்அமைச்சர் பதவியேற்ற மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு இக்கோரிக்கையை முன்வைக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

  • சூளைமேடு ஆர். அன்பரசன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button