திருப்பூர் மாவட்டம், கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வங்கிகளில் சுலபமான முறையில் கடன் பெற்றுத்தரப்படும் நிறுவனத்திற்கு அதிக சம்பளத்திற்கு ஆட்கள் தேவை என கவர்ச்சி விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இதனை நம்பி பலர் விளம்பரத்தில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக அப்பாயின்மெண்ட் ரெடி. மேலும் அவர்களை குக்ஷிப்படுத்த உடனடியாக சொர்ப்ப பணம் அவர்களது பேங்க் அக்கவுண்டுல் ஏறிவிடும்.பின்னர் மேற்படி போன் நம்பரில் இருந்து வேலையில்.சேர்ந்த நபருக்கு போன் வருமாம். போனில் பேசும் நபர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்து ஒரு கவரை வாங்க சொல்லுவாராம், பின்னர் மற்றொரு இடத்தில் நிற்கும் நபரிடம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகை பெற்றுக்கொண்டு அதை மேற்படி முகம் தெரியாத நபர் கொடுக்கும் அக்கவுண்டில் செலுத்தவேண்டும்.
தொடர்ச்சியாக இது போன்ற வேலைகளை செய்யச்சொல்லி முகம் தெரியாத மேலிடம் இடும் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். ஆனால் நிறுவனத்தின் உரிமையாளர் யாரென்று யாருக்கும் தெரியாது. ஏன் கடன் கேட்பவருக்கு கூட விபரங்கள் தெரியாது. இந்நிலையில் மேற்படி கடன் பெற்று தருவதாக தரும் வரைவோலை பிரபல வங்கிகள் பெயரில் போலியாக தயாரித்து கொடுத்து அப்பாவிகள் மூலம் பணத்தை பெற்று மோசடி செய்திருப்பதாக தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
சுலபமாக கடன் என்கிற கவர்ச்சி விளம்பரத்தை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதால் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முகம் தெரியாத மோசடி மன்னன் கொடுத்த விளம்பரத்தை நம்பி கை நிறைய சம்பாதிக்கலாம் என்கிற கனவுகளோடு இருந்த அப்பாவிகள் செய்வதறியாது விழிபிதுங்கி கொண்டிருக்கும் போது மோசடியை தொடர செல்பரை ஆஃப் செய்துவிட்டு வேறு நம்பரில் மோசடி மன்னன் பயணம் தொடரும்.
கடன் வேண்டுவோர் நேர்வழியில் சென்று அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் முகவர்களையோ, வங்கிகளை நேரடியாக நாடினால் மட்டுமே இது போன்ற மோசடிகளை தடுக்க முடியும். இவற்றையெல்லாம் விட ஹைடெக்காக பின்னலாடைக்கு பெயர்போன திருப்பூரில் கோடிக்கணக்கில் பனியன்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற முடியாதவர்களை அணுகி ஒரு கும்பல் லட்சக்கணக்கில் பணத்தை ஏப்பம் விடுவது தொடர்கதையாக உள்ளது.
மேலும் இது போன்ற விவகாரங்களில் சிவில் வழக்காக கருதாமல் கிரிமினல் வழக்காக பதிவு செய்து பணத்தை இழந்தவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
நமது நிருபர்