பல்லடத்தில் சிலம்பாட்ட வீரர்கள் திறனாய்வு தேர்வு முகாம்
திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பாட்ட விளையாட்டு வீரர்களுக்கான திறனாய்வு போட்டி பல்லடத்தை அடுத்த அருள்புரம் ஜெயந்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவில் உள்ள சிலம்பாட்ட விளையாட்டு விரர்களுக்கான திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வாகும் வீரர்களின் பெயர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது.
மேலும் தமிழ்நாடு அரசு சிலம்ப விளையாட்டிற்கு அரசு வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டில் 3 சதவீகிதம் வழங்கியுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் திறனாய்வு போட்டி முகாம் நடத்தப்பட்டது. இந்த போட்டி முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் ஜோடி வரிசை, படைவீச்சு, சுருள்வாள், வேல்கம்பு மற்றும் தனித்திறமை சிலம்ப விளையாட்டுக்களை செய்துகாட்டி அசத்தினர்.
மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட தலைவர் ரங்கசாமி மற்றும் மாநில சிலம்பாட்ட கழகத்தின் போட்டி இயக்குநர் சி.அழகிரி, மாநில துணை செயலாளர் மாமன்னன் செந்தில் முருகன் மற்றும் ஜெயந்தி பள்ளி தாளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் தி.முத்தையா மற்றும் பயிற்சியாளர்கள் மதிவாணன், ஜெயச்சந்திரன், சக்திவேல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.