தமிழகம்

மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவு.

சென்னை வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி பேருந்து மோதி, மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வளசரவாக்கம் இளங்கோ நகா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபா். இத் தம்பதியின் மகன் தீக்ஷித் (8) ஆழ்வாா் திருநகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 28-ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் தீக்ஷித் வேனை விட்டு கீழே இறங்கி நிற்கும்போது அவா் மீது அந்த வேன் மோதியது. இந்த விபத்தில் சிறிது நேரத்தில் தீக்ஷித் இறந்தாா்.

இதையடுத்து வளசரவாக்கம் போலீஸாா், வேன் ஓட்டுநா் பூங்காவனம், குழந்தைகள் கவனிப்பாளா் ஞானசக்தி, பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷ், முதல்வா் தனலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் பூங்காவனம், ஞானசக்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தும் வகையில், பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷிடம் சுமாா் 12 கேள்விகள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நோட்டீஸுக்கு இரு நாள்களில் பதில் அளிக்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button