தமிழகம்

ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கடந்த 22. 3. 2020 ஆம் தேதியன்று சுய ஊரடங்கு நடத்த உத்தரவிட்டார்கள். இதுதொடர்பாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து அரசு மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து மதுபானக்கடை பார்களும் தொடர்ந்து மூடப்பட்டன.இதனைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் சட்டவிரோதமாக சில்லறை மது விற்பனையில் ஈடுபடுவதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்தியேக கைபேசி எண் 94 89 197 722 என்ற எண்ணிற்கு ரகசிய தகவல்கள் கிடைக்கப் பெற்றது. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி நடவடிக்கையால் கடந்த 22.3.2020 ஆம் தேதி முதல் இன்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,487 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் விபரம் பின்வருமாறு:-
இராமநாதபுரம்:429
பரமக்குடி:318
கமுதி:635
இராமேஸ்வரம்:935
கீழக்கரை:492
திருவாடானை:140
முதுகுளத்தூர்:300
இராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவு:125
கமுதி மதுவிலக்கு பிரிவு:113.

இதில் குறிப்பாக 24.3.2020 ஆம் தேதியன்று கமுதி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த சுமார் 650 மதுபாட்டில்கள் தனிப்படையினரால் கைப்பற்றப்பட்டு அதனை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் விதிமுறைகளை மீறி அவர்களுக்கு உதவியாக செயல்படும் அரசு மதுபானக்கடை ஊழியர்களும் வழக்குகளில் எதிரிகளாக சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
தற்போது கொரோனா வைரஸ் நோய் பரவும் அபாயம் இருந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறும் இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட வாய்ப்புள்ளது இதனால் கொரோனா வைரஸ் நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே இதுபோன்று சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது Disaster Management, Act 2005,Epidemic diseases Act மற்றும் indian penal code கீீீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர், வீ.வருண்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button