அரசியல்தமிழகம்

ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி! : பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள்.

இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது.

இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது.

அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றவேண்டும் என்று அக்னிகுல பெருந்தலைவன் சி.என்.இராமமூர்த்தி பெரு முயற்சியைத் துவங்கினர்.

வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு களமிறங்கிய அக்னிகுல பெருந்தலைவன் சி.என்.இராமமூர்த்தியை சொந்த இனத்தாரே கேலியும், கிண்டலுமாக பார்த்தனர்.

கொண்ட கொள்கையில் என்றுமே உறுதியாக நிற்கும் அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி தன்னுடைய போராட்டத்தை 1989ல் அப்போதைய தமிழக கவர்னர் அலெக்சாண்டரின் உதவியோடு துவங்கினார். முதலாவதாக முக்கிய அறக்கட்டளைகள் மற்றும் சொத்துக்களை அடையாளம் காண துவங்கினார்கள். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னும் வன்னிய முன்னோர்கள் இன நலனுக்காக, இன மக்களின் முன்னேற்றத்திற்காக விட்டு சென்ற சொத்து மதிப்பு சுமார் பத்து இலட்சம் கோடிகள் இருக்கலாம் என கணக்கிடபட்டது.

இந்த சொத்துக்கள் யாவும் உயில் மூலமாக இந்த அறக்கட்டளைகளுக்கு எழுதி தரப்பட்டது என்பது மிக முக்கியமான செய்தி.

இந்த காலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் சர். பி.டி.லீ செங்கல்வராயண் நாயக்கர் கொடுத்து சென்ற சொத்துக்கள் மீட்கப் பட்டது.


அதன் பிறகு மிக நீண்ட தேடல், போராட்டங்கள், புலன் விசாரணைகள் மேலும் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மூலமாக சுமார் 103 சொத்துக்கள் அடங்கிய பட்டியல் தயாராக உள்ளது.

இந்த போராட்டம் ஏறத்தாழ முப்பது ஆண்டு காலம் நடைபெற்று தற்போது அக்னிகுல பெருந்தலைவன் சி.என். இராமமூர்த்தி முயற்சியால் வென்று உள்ளோம். இந்த போராட்டத்தில் சந்தித்த அனைத்து தடங்கல்களையும் கடந்து வந்து பொறுமையுடன் கொண்ட கனவை சாதித்த பெருமை அக்னிகுல பெருந்தலைவன் சி.என். இராமமூர்த்தியையே சாரும்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்று பதியப்படுகிறது. இந்த வழக்கு எண்: 26565/2011 என்பதாகும். இந்த வழக்கின் வேண்டுதல் வன்னிய பொது சொத்து வாரியம் அமைக்க ஆணையிட வேண்டும் என்பதே. இந்த வழக்கு மிக சிறப்பாக நடத்தப்பெற்று 18.11.2011 அன்று வன்னியர் கூட்டமைப்பிற்கு சாதகமாக அமைந்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து சட்ட வடிவமாக்க 15.6.2018 அன்று அக்னிகுல பெருந்தலைவன் சி.என்.இராமமூர்த்தி மாண்புமிகு முதலமைச்சருக்கு ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றினை எழுதி மேலும் பல முறைகள் முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தார்.


அதை தொடர்ந்து தமிழக அரசு ஒரு வாரியத்தை அமைத்து அரசானை எண்: G.O.(MS) No.20 dated 02.03.2009 அன்று வெளியிட்டது. அந்த அரசானை படி இந்த வாரியத்தின் முக்கியமான பணி வன்னியர் அறக்கட்டளைகளை / தர்ம சாசன அருட் கொடை பணிகளை சரியான முறையில் கண்காணித்து அதன் மூலம் வன்னியர்குல ஷத்திரியர் இன மக்கள் பயன் பெற வேண்டும் என தெரிவித்தது.

இந்த வாரியம் செயல் படுவதற்காக எண். 736, அண்ணா சாலையில் உள்ள LLA வளாகத்தில் 4 வது தளத்தில் அமைக்கபட்டது.

தமிழ்நாடு வன்னியகுல க்‌ஷத்ரிய பப்ளிக் டிரஸ்ட் அண்ட் எண்டோன்மெண்ட் ஆக்ட் -2018 இன்படி, ‘வன்னியர், வன்னிய கவுண்டர், கண்டர், படையாச்சி, பள்ளி, அக்னி குல க்‌ஷத்ரியா என்ற பெயர்களைத் தாங்கியிருக்கும் அனைத்து டிரஸ்டுகளும் வன்னிய பொதுச் சொத்து நலவாரியத்துக்கு உட்பட்டதாகும். பழங்காலங்களில் இந்த டிரஸ்டுகள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்துக்காக செயல்படுவதை இந்த டிரஸ்ட் உறுதி செய்யும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் 2019 பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி அமைக்கப்பட்டது. வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டார்.

உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

உறுப்பினர் செயலாளராக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிலம் கையகப்படுத்துதல் துறை சிறப்பு டி.ஆர்.ஓ.வான பிருந்தா தேவியும், சிறப்பு பார்வையாளராக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஓய்வுபெற்ற பொறியாளரான ஆர்.தியாகராஜனும் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் 18 மாவட்டங்களில் வன்னியர்கள் பெயரில் அமைந்திருக்கும் டிரஸ்டுகளை தமிழக அரசு பட்டியலிட்டது.


இதுபற்றிய அறிவிப்பில் மேலும் வன்னியர்களுக்கான சமுதாய டிரஸ்டுகள் ஏதும் இருந்தால் அவற்றை வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் வன்னியர் கல்வி அறக்கட்டளையை தமிழக அரசு கைப்பற்ற சட்ட ரீதியான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.

கடந்த அரசாங்கம் அதிமுக- பாமக கூட்டணியில் இருந்ததால் வன்னியர் கல்வி அறக்கட்டளை பற்றி அரசு ஏதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சில வன்னிய பிரமுகர்கள், ‘வன்னியர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட வன்னியர் கல்வி அறக்கட்டளையை சட்டப்படி அரசு வன்னிய பொதுச் சொத்து நல வாரியத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசுக்கு மனுவும், அதையடுத்து நீதிமன்றம் செல்லத் திட்டமும் வைத்திருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகள் நடப்பது பாமகவுக்குத் தெரிந்தது. அதனால் தொடர்ந்து இதே பெயரிலேயே டிரஸ்ட் நீடித்தால் சட்ட ரீதியாக அரசின் வசம் போக வாய்ப்பிருக்கிறது.

ஏறகக்குறைய பல நூறு கோடிகள் சொத்துகள் கொண்ட வன்னியர் கல்வி அறக்கட்டளை அரசின் வசம் போகாமல் தடுப்பதற்காகத்தான் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று மாற்றப்பட்டிருக்கிறது.

அதிமுக அரசின் புரிந்துணர்வு இல்லாமல் இந்த பெயர் மாற்றம் நடந்திருக்க முடியாது.ஆனாலும் இந்த பெயர் மாற்றம் வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைக்கப்பட்டதற்கு பிறகு செய்யப்பட்டிருந்தால் அதையும் சட்ட ரீதியாக சேலஞ்ச் செய்யலாம் என்கிறார்கள் பாமகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருக்கும் வன்னிய பிரமுகர்கள். இந்த சூழலில் பொது சொத்துவாரிய தலைவர் பதவி பிபரவரி முதல் வாரத்தோடு முடிவுக்கு வருகிறது.

இப்போது தலைவராக இருக்கும் சந்தானம் ஐஏஎஸ் மீண்டும் நீடிப்பு பெற முயற்சிக்கிறார்.  அதே நேரம் பல கோடி மதிப்புள்ள பல அறக்கட்டளைகளை மருத்துவர் ராமதாஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அவற்றை மீட்டெடுக்க சரியான தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த பொது சொத்து வாரியம் அமைக்க வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்திக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் கடந்த எம்.பி தேரத்லிலும் சமீபத்திய சட்டமனற தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக சி.என்.இராமமூர்த்தி பரபரப்பாக பிரச்சாரம் செய்தவர் என்பதும்,
இப்போதுவரை திமுக தலைவர் ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருப்பதாலும் வாரியதலைவர் பதவி இவருக்கே கிடைக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

கோடங்கி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button