தமிழகம்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 61 வயது ஆசிரியர்.. மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்க முடியுமா?

நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு 61 வயதான தருமபுரியை சேர்ந்த சிவபிரகாசம் தனது மருத்துவ கனவை நனவாக்க முயன்றார்.

அரசுப் பள்ளி ஆசிரியரான அவர் பல மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளித்து பல மாணவர்களின் மருத்துவ கனவு நனவாக்க உதவியாக இருந்துள்ளார். தர்மபுரி மாவட்டம் இந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லாததால் விலங்கியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அவருக்கு முதல் முயற்சியில் 249 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற அவர் கலந்தாய்வில் பங்கேற்க வந்தார். அவரது மகன் கன்னியாகுமரியில் பயிற்சி மருத்துவராக உள்ளார். தன் தந்தை கலந்தாய்வில் பங்கேற்று ஒரு இளைஞரின் மருத்துவ கனவை கலைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எனவே கலந்தாய்வு வளாகத்துக்கு வந்தாலும் பங்கேற்கலாமா வேண்டாமா என குழப்பத்துடனே இருந்து வந்தார். அதன் பின், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்து விட்டார்.

இதற்கிடையில் அவர் பங்கேற்றாலும் இடம் பெறுவதற்கு விதிகள் அனுமதிக்காது என கலந்தாய்வு செயலாளர் வசந்தாமணி விளக்கம் அளித்துள்ளார். நீட் மதிப்பெண் அடிப்படையில் அவர்களது பெயர்கள் தரவரிசை பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மருத்துவ இடம் கிடைக்காது. Act 3/2007 பொது நுழைவுத் தேர்வு சட்டப்படி பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். இவர் உட்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்- பியுசி முடித்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. தமிழ்நாட்டில் 1979ம் ஆண்டு முதல் பியுசி தேர்வு ரத்து செய்யப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button