10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து? : சி.என்.ஆரின் தொடர் சட்டப் போராட்டம்! : நாடகமாடியது ராமதாசா? எடப்பாடியா?
சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முந்தய தினத்தில் வன்னியர்களின் நீண்ட நாள் கோர்க்கையான உள் ஒதுக்கீடு 10.5% பெறுவதற்கான அரசாணையை அப்போதைய முதல்வர் பழனிச்சாமி அவசர அவசரமாக அறிவித்தார்.
அந்த அறிவிப்பு வந்தபோது வட மாவட்டங்கள் கொண்டாடின. தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிமுக அமைச்சர்கள் கூட கிராமங்களில் நுழைய முடியாமல் விரட்டி அடிக்கப்பட்டனர். அந்த சூழலில் அமைச்சர் உதயகுமாரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ் இருவரும் பிரச்சார மேடைகளில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த சுழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான அரசு அமைந்தது. ஏற்கனவே முந்தைய அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட 10.5சதவீத உள் ஒதுக்கிட்டை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தினார்.
அரசின் இந்தமுடிவை எதிர்த்து பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல வ்ழக்குகள் தொடரப்பட்டது. இந்த சூழலில் அரசு அறிவித்த 10.5 சதவீத உள் ஒதுகீட்டை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட போது என்னால்தான் வந்தது என மருத்துவர் ராமதாஸ் சொந்தம் கொண்டாடினார். ஆனால், இந்த இட ஒதுக்கிடு கிடைக்க வழி செய்த நீதிமன்ற தீர்ப்பை பெறுவதற்கு சட்டப்போராட்டம் நடத்தியது வன்னியர்கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி என்ற விவரம் மறைக்கப்பட்டது. இந்த சூழலில் உள் ஒத்துக்கீடு ரத்தானதால் இந்த உள் ஒதுக்கீட்டுக்கு சட்டப்போராட்டம் நடத்தியது யார் என்பதை 184 பக்க மதுரை கிளை நீதிமன்ற உத்தரவில் வெளியானது.
10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு
சி.என்.இராமமூர்த்தி நடத்திய சட்ட போராட்டம் மூலமகத்தான் கிடைத்தது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பில் (p.no13,14,28) குறிப்பிடபட்டுள்ளது. சட்ட போராட்டத்தின் ஆவணங்கள் சரிவர குறிப்பிடாததே இன்று 10.5% வந்த தடைக்கு காரணம். வன்னியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வேண்டி 2010 ல் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என்.இராமமூர்த்தி (1980களில் வன்னியர் சங்கம் பொது செயலாளர்) என்பவர் வன்னிய குல சத்திரியருக்கு 15% உள்ஒதுக்கீடு 20% (இதில் அன்றைய முதல்வர் கலைஞர் மற்றும் வன்னியர் சங்கம் பொது செயலாளர் சி.என். இராமமூர்த்தி 20% MBC ஒதுக்கீடு ஒப்பந்ததில் கையொப்பம் இட்டவர்) இலிருந்து வேண்டி பல வருடங்களாக அறப்போராட்டம் நடத்தி அதன் பின் சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து உயர்நீதிமன்றத்தில் தனி ஒரு ஆளாக வன்னியர் கூட்டமைப்பு சார்பாக 2010 ல் வழக்கு தொடுத்து நீதிமன்ற ஆணை மற்றும் அரசாணையை 2012ஆம் ஆண்டிலேயே பெற்றார்.
வழக்கு எண் WP No 14025 of 2010.அரசாணை எண் G.O. (Ms) No 35 of 2012 அரசாணை பெற்றபிறகு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பிறகு மீண்டும் உயர் நீதிமன்றம் சென்று 2015 ஆம் ஆண்டு தலைமை நீதியரசர் கவுல் அவர்கள் இதை உடனடியாக செயல்படுத்துமாறு இறுதி ஆணை பிறப்பித்தார். அதன் பிறகு தலைமைசெயலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட நல துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் பல அமைச்சர்களையும் பலமுறை நேரில் சென்று மனுக்களையும், விளக்கமும் தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட நல துறை தலைமை செயலாளர் அருள்மொழி IAS பதில் குறிப்பிடும் போது ஒதுக்கீட்டின் செயல்பாடு அரசு பரிசீலனையில் உள்ளதாக பதில் கொடுத்துள்ளார்.
இதன் இடையே 12/10/2020 நாள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. அதற்கு பின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் பிப்ரவரி 3 இல் 2021 நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிஎன்ஆர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
வழக்கு எண் S.No. WP/10546/2021.. அதன் பிறகு நீதிமன்ற அவ பெயர் அரசுக்கு வந்துவிடும் என்ற கட்டாயத்தால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிப்ரவரி 26 இல் 10.5% உள்இடஒதுக்கிட்டை அறிவித்தார். (இதில் முறையாக சட்ட போராட்டம் ஆவணங்களை முழுமையாக குறிப்பிடபடவில்லை). அந்த சட்ட முன் வடிவு எண் 14/2021.
அதை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்து செயல்படுத்தியிருந்தார். இதன் இடையே இன்று 10.5% உள்ஒதுக்கீடு தடைக்கு முழு காரணம் சட்டத்தின் வழிமுறையை பின்பற்றி கொடுக்கப்பட்டிருந்தாலும் சில முக்கிய ஆவணங்கள் மறைக்கப்பட்டதால் தான் நீதிமன்றத்தில் ஒதுக்கீட்டிற்கு இறுதி தீர்ப்பு பெற்றும் இன்று நீதிமன்றமே தடை விதிக்க காரணமாக அமைந்தது. இங்கு அரசியல் உள்நோக்கில் ஒருவருக்காக செய்த தவறு இன்று வன்னியர் சமூகத்தின் முன்னேற்றதிற்கு முட்டு கட்டையாக அமைகிறது. நம் ஒதுக்கீட்டை நிலைபெற செய்ய சட்டப்போராட்டத்தின் மூலமாக சி.என்.இராமமூர்த்தி தொடுத்த வழக்கின் தீர்ப்பை உள்ளடக்கிய அனைத்து ஆவணங்களை கொண்டே உள் ஒதுக்கீட்டை மீட்டெடுத்து உறுதி செய்ய முடியும்.
மீண்டும் ஒரு சட்டப்போராட்டத்திற்கு சி.என்.ஆர் தயாராகி வருகிறாராம். இது குறித்து வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தியிடம் பேசியபோது, 10.5% இடஒதுக்கீட்டுக்கு தடையை மதுரை கிளை வழங்கியிருக்கிறது. முறைப்படி இட ஒதுக்கீட்டை அதிலும் உள் ஒதுக்கீட்டை எப்படி பெற வேண்டுமோ அந்த அனைத்து வழி முறைகளையும் பின்பற்றி உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பைத்தான் அமல்படுத்தி இருந்தார்கள். ஆனால், இதை புரிந்து கொள்ளாதவர்களால் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்கள் முந்தைய தீர்ப்பில் உள்ள சாராம்சங்களை, சட்ட நுணுக்கங்களை சரியாக நீதிபதிகள் முன்பு எடுத்து வைக்க தவறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நாம் 2012 ல் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணை, தமிழக அரசின் அரசாணை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் பரிந்துரை, மற்றும் 2015 இல் பெற்ற நீதிமன்ற இறுதியாணை போன்ற ஆவணங்களை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்கு வாதாடியவர்கள் எடுத்து வைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இருந்த போதும், வன்னியர்கள் வாழ்வில் கரு மேகமாய் மறைக்கும் இந்த தடையும் கண்டிப்பாக அறிவாயுதம் கொண்டு நாம் வெற்றி பெறுவோம். ஏற்கனவே 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சகோதர சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் சரி, உச்சநிதிமன்றமும் சரி 10.5% உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக தடை விதிக்க மறுத்துவிட்டனர். ஏன்னென்றால் இந்த இரண்டு நீதிமன்றமும் முறையாக ஆவணங்களை ஆராய்ந்து பார்த்து தடைவிதிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க தகவல்.
இதுகுறித்து தமிழக அரசையும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம். விரைவில் சட்டப்படி அறிவாயுதம் ஏந்தி வன்னிய சமூகத்தை அடி நிலையில் இருந்து உயர்த்தும் தனி உள் ஒதுக்கீட்டை மீண்டும் முறையாக பெறுவோம்” என்கிறார் சி.என்.ஆர்.
தற்போது இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– கோடங்கி