தமிழகம்

நூற்றுக்கணக்கான ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்த திருச்சி தம்பதியர்

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காவல்துறை உதவியுடன் அனாதை பிரேதத்தை, அரசு அமரர் ஊர்தியில் ஏற்றி மயானத்திற்கு கொண்டு சென்று, தனது சொந்த செலவில் இறுதி சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனர் தம்பதியர் சகிதமாக.

இதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற பிணங்களை அனைத்து சடங்குகளுடன் அடக்கம் செய்துள்ளனர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை தம்பதியர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியர்.நல்லடக்கம் செய்வது குறித்து பேசுகையில்,

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புத்தூர் பகுதியில் ஆதரவற்ற முதியோர்களுக்கும் உழைக்க இயலாதவர்களுக்கும் ஆண்டுதோறும் உணவளித்து வருகிறோம். சொந்தம் என்று சொல்லிக்க யாரும் இல்லாமல் ஆதரவற்றவராக இறந்தவர்களுக்கு அவருக்கான ஈமச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்துவருகிறோம் அரசு மருத்துவமனை காவல் நிலையங்களுக்கு அனாதை பிணம் இருப்பது குறித்த தகவல் வந்தவுடன் அவர்கள் எங்களையும் தொடர்பு கொள்வார்கள்.

நாங்கள் அவர்கள் உதவியுடன் எங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்துவிடுவோம். ‘‘இறந்தவரின் பெயர், ஜாதி, மதம் போன்ற விவரங்கள் எதுவுமே தெரியாது. ஆனால், அவர்களை எனது உறவினர்களாக கருதியே இறுதி சடங்குகளை மேற்கொள்வோம். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கினை இதற்காக ஒதுக்கி விடுகிறோம். சில சமயம், ஒரே நாளில் மூன்று நான்கு ஆதரவற்ற பிணங்கள் வரும். அந்த சமயத்தில் கையில் காசு இருக்காது. கடனை வாங்கி இறுதி சடங்கு செய்ததும் உண்டு. தினமும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி ஒருவேளை உணவு வழங்கி வருகிறோம்.

இங்கு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என பலர் சுற்றித்திரிவதை பார்த்து இருக்கோம். அவங்களுக்கு யாரும் வேலை தரமாட்டாங்க. ஒரு வேளை உணவு யாராவது கொடுக்கமாட்டாங்களான்னு சுற்றி திரிவாங்க.அவர்களுக்கு தினமும் ஒருவேளை சாப்பாடு மட்டும் வழங்கி வருகிறோம். இதில் எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது” என்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button