தமிழகம்

பெண் காவலருடன் கள்ளத்தொடர்பு.. மனைவியை குழந்தையுடன் அடித்துவிரட்டிய கணவன்

கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த காதல் திருமணம் செய்துகொண்ட கார்த்தி – வனிதா தம்பதியினருக்கு, 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் கரூரில் செல்போன் கடை வைத்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வந்த கார்த்தி – வனிதா தம்பதி வாழ்வில் சூறாவளியை வந்து இறங்கினார் கரூர் ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் போலீஸ் கௌசல்யா.

கரூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கௌசல்யாவுக்கு திருமணமாகி அவருக்கு குழந்தை உள்ளது. செல்போன் கடைக்கு வந்த கௌசல்யாவுக்கு கார்த்திக் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. பணி முடிந்ததும் கௌசல்யா நேராக கார்த்தியின் செல்போன் கடைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதன்காரணமாக கார்த்திக் செல்போன் கடையில் இருந்து கொண்டு வீட்டிற்கே செல்வதில்லை. இதுகுறித்து கார்த்தியை தொடர்புக்கொண்டு வனிதா கேட்டபோது கடையில் வேலை அதிகமாக இருப்பதால் வீட்டிற்கு வரமுடியவில்லை என பொய் சொல்லி வந்துள்ளார்.

கார்த்தியின் வார்த்தையில் சந்தேகமடைந்த வனிதா நேராக கடைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் பெண் காவலர் கௌசல்யாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதன்காரணமாக கோபமடைந்து கணவரிடம் கேட்டபோது நான் அப்படித்தான் இருப்பேன் நீ வேணும்னா வீட்டுக்குப் போ என்று சொல்லி மிரட்டி துன்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து, வனிதா பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை காவல் நிலையங்களில், கணவர் மற்றும் கள்ளத் தொடர்பில் இருந்த பெண் காவலர் மீது புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையில் கார்த்திக் பெண் காவலரை நேராக வீட்டிற்கு அழைத்து வந்து அங்கேயும் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதை கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்தி இரண்டு பேரும் சேர்ந்து வீட்டை விட்டு விரட்டி உள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையுடன் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கதியாக தெருவில் இருந்துள்ளார். பெற்றோரை எதிர்த்து கார்த்திகை காதல் திருமணம் செய்து கொண்டதால் தாய் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வனிதாவின் தாய் மீண்டும் வனிதாவிற்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறார்.

புகார் கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், செல்போன் கடைக்கு சென்று அங்கே கணவர் பெண் காவலர் கள்ளத்தொடர்பில், இருந்தபோது பெண் காவலர் அணிந்திருந்த காவலர் உடையை எடுத்துக்கொண்டு நேராக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க குழந்தையுடன் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பெண்ணின் தாய் வந்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்டு, ஒரு பெண் காவலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து மகளை துன்புறுத்தி அடித்து விரட்டுவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பெண்ணின் தாய் புகார் அளித்தனர். திருமணமான பெண் காவலருடன் கள்ளத் தொடர்பில் இருந்து கொண்டு குழந்தை மற்றும் மனைவியை அடித்து துன்புறுத்தி விரட்டிய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button