தமிழகம்
H. ராஜா குற்றவாளி ! சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதீய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் H ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும், பெரியார் குறித்தும் அவதூறு பரப்பும் நோக்கில் தனது எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
அதாவது பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டதால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் H ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அப்போது ஈரோடு மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் H ராஜா குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ளது.