மக்கள் நலப்பணியில் நற்சாந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர்
நம் மக்களின் தொடர்துயரமாய் வாட்டிவரும் கொரோனா தொற்றினால் பலர் வாழ்க்கையையே இழந்து வாடுவது நிதர்சனமான உண்மை. தமிழக அரசு இந்த பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் ஊரகப் பகுதிகளில் மிகச்சிலரே மக்களின் தேவையறிந்து பணியாற்றி வருகிறார்கள்.
அவ்வகையில் நம் ஊடக பிரிவிற்கு வந்த தகவல் அடிப்படையில் பொதுமக்களுக்கு மிகச் சிறப்பாக சேவையாற்றிவரும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் நற்சாந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர் R.சிதம்பரம் அவர்களின் பணி பற்றி பொது மக்களின் கருத்தை அறிய நம் நிருபர் குழு சென்றது.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நற்சாந்துபட்டி ஊராட்சிக்கு மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் R.சிதம்பரம் படித்த பட்டதாரி என்பதால் மக்களின் குறையறிந்து மிகச்சிறப்பாக சேவை புரிந்து வருகிறார்.
இந்த கொரொனா பேரிடர் காலத்தில் வீதிகள் தோறும் சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளித்து ஊராட்சி பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் கபசுரக் குடிநீர் வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்றதாக கூறுகிறார்கள். மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு 120 நாள் உணவு வெயில் காலத்தில் போர் போட்டு தண்ணி டேங்க் அமைத்தல் இலவச ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களான அரிசி மளிகை பொருட்கள் வழங்கி பொதுமக்களிடம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மக்கள் அச்சப்படாத வகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் அனைவருக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தி வருகிறார்.
ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மக்களுக்கு தேவையான காய்கறிகள் கிடைக்கும் வகையில் வாரச்சந்தையை பகுதி வாரியாக பிரித்து மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்கும் படியும் அதேநேரம் வெளியில் வரும் மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று பத்தாயிரம் முககவசம் வழங்கியுள்ளார். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியும் செயல்பட்டு வருகிறார்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தேவையான தகுதியான பயனாளர்களுக்கு கிடைக்கும்படி செய்து வருகிறார். இயற்கை பேரிடராம் பெருமழை நேரங்களில் மழை நீர் வீணாகாமல் சேமிக்கும் பொருட்டு வரத்துவாரிகள் அனைத்தும் ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்து அனைத்து கண்மாய்களும் நிரம்பும்படி செய்துள்ளார்.
மேலும் மரக்கன்றுகள் நடுதல், புங்கமரம் பனை விதை நிழற்குடை அமைத்தல், தூய்மைப் பணியாளருக்கு உபகரணங்கள் வழங்குதல், கோயில் ஆலயம் முதியோர் படைப்பு வீடு எண்ணற்ற உதவிகளும் தூய்மைப் பணிகளும் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குளியல்தொட்டிகள், குடிநீர்குழாய் விரிவாக்கம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சாலைவசதி, தெரு விளக்குகள் என ஊராட்சிக்குரிய தமிழக அரசின் திட்டங்களை முறையாக ஒன்றியத்திலிருந்து பெற்று மக்களின் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த ஊராட்சியை பொருத்தவரை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவரின் அனைத்து மக்கள் நல செயல்பாடுகளுக்கும் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற துணைதலைவர், ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற பணியாளர்கள் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
மக்கள் பணியில் சிறப்பாக செயலாற்றி வரும் நச்சாந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர் R.சிதம்பரம் அவர்களை பொதுமக்கள் பாராட்டும் அதே வேளையில் நம் ஊடகப்பிரிவு மகிழ்வோடு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்திலேயே சிறந்த முன்மாதிரி ஊராட்சியாக நச்சாந்துபட்டி ஊராட்சி விளங்கிட வாழ்த்துகிறோம்.