உலகளவில் சாதனை!: இரண்டரை வயது சாய்சஞ்சீவ்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப வயதோ இரண்டரை, சாதனையோ உலகளவில் என்ற அசத்தும் சுட்டிப்பையன் கற்றலும், விளையாட்டு என்று தன் இயல்பையே சாதனையாக மாற்றியுள்ளார் இச்சுட்டிப் பையன். சாதனைக்கு வயது ஒரு தடையல்ல, ஆர்வம் இருந்தால் போதும் என முனைப்புடன் செயல்பட்டு தன் திறமையை பவனி வரச்செய்துள்ளார் சாய்சஞ்சீவ்.
அப்படி என்ன சாதனை அது என உள்ளம் அலைமோதுகிறதா? இதோ அடுத்த வரிகளில் சாய்சஞ்சீவ் சாதனைகள் வார்த்தைகளாய் விவரிக்கிறோம். பல வண்ணங்களில் உள்ள பந்துக்களை சேகரித்து குறிப்பிட்ட தூரத்திலிருந்து கூடைக்குள் வீச வேண்டும் என்பதே இலக்கு. பல வண்ணங்களில் பந்துக்களை சேகரிக்கும் ஆர்வம் உள்ளவர் சாய்சஞ்சீவ். அப்படியாக ஆர்வமுடன் தான் எடுத்த 50 பந்துக்களை 5 அடி தூரத்தில் அமைந்திருக்கும் கூடையில் 2.29 நிமிடத்தில் போட்டு உலக சாதனையாக முத்திரை பதித்துள்ளார்.
இந்த 5 அடியின் சிறப்பு என்னவென்றால் இயற்கைக்கு நிகரான (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்) ஐம்புலன்களை குறிக்கும் விதமாகவே இந்த சாதனையை வெளிப்படுத்தி உள்ளார். அடுத்ததாக 125 புகைப்படங்கள் அடங்கிய அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தொகுப்பை பெயர்களோடு அடையாளப்படுத்தி கூறியுள்ளார். அதாவது (காய்கறிகள், பழங்கள், விலங்குகள், சாப்பிடும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் 7 நிமிடமும் 12 விநாடிகளில் கூறி தன் நினைவுத்திறனை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சுட்டி சாதனையாளரின் சாதனையைப் பற்றி பெற்றோர் சரண்யா, செந்தில்குமார் கூறுகையில் குழந்தையின் விரைந்து கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், சுறுசுறுப்பையும், கற்றவைகளை எளிதாக நினைவு கூர்ந்து பட்டியலிடும் திறமையைக் கண்டு வியந்ததால் இதை சாதனையாக மாற்றினால் என்ன என்று முடிவெடுத்து இம்முயற்சியில் சாதனை படைத்துள்ளதை மகிழ்ச்சியோடு ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சிறிய செயலுக்கு கூட பெற்றோர் தரும் அங்கீகாரமும், பாராட்டுகளுமே அவர்களுக்கு ஊக்குவிக்கும் காரணங்களாக அமையும். இக்காரணங்கள் தடையின்றி திறமைகளை வளர்த்து சாதனையாக மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகள் செய்வதை உற்று கவனியுங்கள். உலக ஏணியில் ஏற்ற ஊன்றுகோலாக உடன் இருங்கள். செயல்கள் சாதனையாகும். சாதனைகள் வசப்படும்.
இச்சாதனை உலக சாதனை அமைப்பான DCB WORLD RECORDS தஞ்சை குழுவினர் ஆய்வு செய்து அதற்கான சான்றிதழ்களும், கௌரவப்படுத்தும் விதமாக 5 பதக்கங்களும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒத்துழைப்பு போன்ற சிறந்த செயல்களை குறித்து இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டது.
ஆய்வு செய்த திரு K.M.சுரேஷ் கூறுகையில் இவருடைய இரண்டு சாதனைகளும், பிரமிக்கும் வகையிலும், உற்றுநோக்கும் திறனும் கொண்ட இவருக்கு உலக சாதனையின் வழிமுறைகளையும், விதிமுறைகளையும் பயன்படுத்தி இவர் விரைவில் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார்.
சிறப்பு செய்திக்காக: ஆ.சூரியா B.Lit., TTC., RJ.,