தமிழகம்

பல்லடத்தில் குழந்தையை புதைத்த தந்தை…! மறந்து போன மனிதநேயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் அரங்கேறியதால் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லடத்தில் குடியேறி தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடுமலை பேட்டையை சேர்ந்த தனலட்சுமி என்பவருடன் காதல் ஏற்பட்டதால் தாய் தந்தையை இழந்த தனலட்சுமியை கடந்த 2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளார்.

இதனிடையே திருமண பந்தத்தின் காரணமாக இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. சண்முகத்தின் குறைந்த வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நான்காவதாக தனலட்சுமி கர்பமானார். இந்நிலையில் இந்த மாதம் 12 ஆம் தேதி வழக்கம்போல் சண்முகம் வேலைக்கு சென்றுவிட அந்த நேரம் பார்த்து தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் தனலட்சுமியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் தனலட்சுமிக்கு சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் தனலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து குழந்தயுடன் 108 ஆம்புலேன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கணவர் சண்முகத்தை அழைத்த தனலட்சுமி மருத்துவமனைக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற கணவர் சண்முகம் மருத்துவமனையை விட்டு கட்டைப்பையில் துணியுடன் பைக்கில் தப்பி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த சண்முகம் கட்டப்பையை வாங்கி துணிகளை எடுத்து பார்த்தபோது பையில் பரிதாபமாக இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் உடனடியாக காளிவேலம்பட்டி பிரிவு அருகே குழி தோண்டி புதைத்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் வீட்டிற்கு திரும்பிவிட்டார். இந்நிலையில் திருப்பூர் மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த தனலட்சுமி மற்றும் குழந்தை குறித்து விசாரிக்க அரசு ஆரம்ப சுகாதார செவிலியர் தனலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தை இறந்த தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தனலட்சுமியை 108 ஆம்புலேன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலை அடுத்து சண்முகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பச்சிளம்.குழந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பல்லடத்தில் காலை சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை திருப்பூர் அரசு மருத்துவமனை ஏ.ஆர். பதிவேட்டில் இறந்தததாக பதிவு செய்யப்பட்டுள்ளது? மேலும் பிரசவ வார்டில் இருந்து எவ்வாறு சுலபமாக குழந்தையை கட்டப்பையில் திணித்து எடுத்து வர முடிந்தது? குழந்தை அழுகுரல் யாருக்கும்கேட்க்கவில்லையா? ஏன் குழந்தை இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் சண்முகம் யாருக்கும் தெரியாமல் உடலை பொது இடத்தில் புதைத்துள்ளார்? என்பன போன்ற பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் சார்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த விவகாரத்தில் தெளிவு படுத்த வேண்டும் எனவும், தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button