ஆதரவற்றோரை ஆதரிக்கும் எம்எல்ஏ-வின் மனைவி..!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது தமிழக அரசு. ஊரடங்கு அமலில் இருப்பதால் சாமானிய மக்களின் வாழ்வாதரம் பாதிக்காத வகையில் அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமைச்சர்களும், அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது தொகுதி மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு பகலாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சமூக சேவை ஆற்றுவதில் தனது கனவரைப் போலவே மெர்சி செந்தில்குமாரும் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் நகரத்தில் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் என கஷ்டப்படும் மக்களுக்கு தினசரி உணவு, கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்.பசியால் வாடும் விளிம்பு நிலை மக்களுக்கு அன்றாட தேவையான உணவுகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக தொழில்கள் அனைத்தும் முடங்கி இருப்பதால் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் திருநங்கை லீலாவதிக்கும், திருநங்கைகளின் தாய்க்கூடு அமைப்புக்கும் அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்திருக்கிறார் மெர்சி செந்தில்குமார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் உணவு வழங்கி வருகிறார். நத்தம் நகரை பசியில்லா நத்தம் என்று மாற்றும் விதத்தில் ஏழைகளுக்கும் , ஆதரவற்ற முதியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவளித்து மக்களின் பசியைப் போக்கி வருகிறார் மெர்சி செந்தில்குமார்.
இது போன்ற எண்ணற்ற சேவைகளை செய்து வருகிறார் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார். இது பற்றிய விரிவான செய்தி வரும் இதழில்…..