தமிழகம்

மதங்களை கடந்து மனித நேயத்தை உணர்த்திய கொரோனா…

கொரானா நோயின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வரும் நிலையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரானா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் பேரிடர் காலத்திலும் தங்களது சமூக சேவையாற்றி திருப்பூர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள்.


ஒரே நாளில் மதங்களை கடந்து மனித நேயத்துடன் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நான்கு இந்துக்கள், ஒரு கிருஸ்தவர், இரண்டு முஸ்லிம்கள் என ஏழுபேரின் உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.

திருப்பூர் வி.எஸ்.ஏ நகரை சேர்ந்த நூர்முஹம்மதுவின் உடலை நள்ளிரவில் எஸ்.ஏ.பி கபரஸ்தானிலும், அமர்ஜோதி கார்டனில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மனைவி மல்லிகாவின் உடலை ஸ்ரீ சக்தி தியேட்டர் மயானத்திலும், அவினாசி பகுதியை சேர்ந்த நஞ்சப்பன் என்பவரின் உடலை ஏ.பி.டி. ரோடு மயானத்திலும், மங்கலம் ரோடு பாரப்பாளையத்தை சேர்ந்த மணி (48) என்பவரது உடலை
ஆத்துப்பாளையம் மயானத்திலும், பல்லடத்தை சேர்ந்த பியூலா வில்லியம்ஸ் உடலை ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள கல்லறைத் தோட்டத்திலும், பல்லடம் ஆறுமுகம் பாளையத்தை சேர்ந்த பரமசிவம் (38) என்பவரது உடலை ஏ.பி.டி ரோடு மயானத்திலும். ஜி.கே. கார்டன் பகுதியை சார்ந்த லுக்மான்(45) உடலை SAP கபரஸ்தானிலும் அவரவர் மத வழக்கப்படி ஏழு பேரின் உடல்களை திருப்பூர் வடக்கு தமுமுகவின் கொரானா பேரிடர்மீட்பு குழுவினர் அவரவர் மத வழக்கப்படி அடக்கம் செய்தனர்.

மதங்களை கடந்து மனித நேயத்துடன் கொரானா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஏழு பேரின் உடல்களை அடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக்கத்தின் நிர்வாகிகளின் சமூக அக்கரை மனித நேயர்த்திற்கு மணி மகுடமாய் திகழ்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button