திருப்பூரில் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள்….! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…?
கொரானா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொராவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் தொடர் செயல்முறை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மளிகை கடை, காய்கறி கடைகள் தவிர்த்து அனைத்து நிறுவனங்களையும் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையிக் திருப்பூரில் நாள்தோறும் கொரானா தொற்று வேகமாக பரவி வந்தது. இதனிடையே பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனௌ கூட்டத்தில் தொழில் சங்கங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
இதனை அடுத்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா. சண்முகம் 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் தமிழக அரசின் கொரானா ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதனை அடுத்து திருப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை மூடி ஆதரவு தெரிவித்தன. இதனிடையே பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கரைப்புதூர் பகுதிகளில் உள்ள ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளர்களை வற்புறுத்தி பணியில் ஈடுபடுத்துவதாக புகார்கள் எழுந்தன.
இதனிடையே நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால், முறையாக எந்த ஒரு அறிவிப்பும் அரசு சார்பில் அறிவிக்காத நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என கைவிரித்துள்ளனர். இந்நிலையில் கரைப்புதூர் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இரண்டு வீதிகளில்149 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் 75 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த பாதிப்புக்களுக்கிடையே அருள்புரம் பகுதியில் செயல்பட்டுவரும் ஏற்றுமதி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது.
மேலும் இங்கு பணிபுரியும் தொழில்சாலைகளை சுற்றி பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை எடுத்துவரும் நிலையில் இந்நிறுவனம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி செயல்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் மேலாளர் ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கேட்டதாகவும், அனுமதி எதுவும் தேவையில்லை என தெரிவித்ததாக கூறினார்.
இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு ஒத்துழைப்பு என்பது வெறும் கண் துடைப்பு நாடகமா? என கேள்வி எழுந்துள்ளது. மேலும் தற்போது நோய் தொற்று 1500 ஐ கடந்து உச்சத்தை தொட்டிருக்கிறது , இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்து வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் லாபநோக்கில் செயல்படாமல் பேரிடர் காலங்களில் அரசு இது போன்ற நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.