வருடம் தோறும் மே 12 ஆம் தேதி உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்கள் மக்களின் ஆரோக்கியத்திற்காக தங்களது குடும்பங்களை மறந்து வீடுகளுக்கே செல்லாமல் மருத்துவமனைகளிலேயே தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
கொரோனா எதிர்ப்பு போரில் தியாக உணர்வோடு தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணிபுரியும் செவிலியர்கள் அனைவரையும் மதித்து பாராட்டும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு கேக் வழங்கி செவிலியர்கள் தினத்தை அரசின் கட்டுப்பாடுகளுடன் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நகரச் செயலாளர் ( தெற்கு ) சேது.கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் சேதுபதி மங்களேஸ்வரி,பரமக்குடி ஒன்றியச் செயலாளர் (மேற்கு ) சந்திரசேகர், பொறுப்புக்குழு உறுப்பினர் வேலவன், வார்டு செயலாளர் பாண்டி,சட்டமன்ற உறுப்பினரின் மகன் துரைமுருகன், சேது முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெ.சங்கர்,
பரமக்குடி செய்தியாளர்.