தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்:பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கு தொடர்பா?

பண்ணை வீட்டில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியை சபரிராஜன் அழைத்து வருவது போன்றும். வீட்டுக்குள் வந்தவுடன் பாதி கதவை திறந்து வைத்துகொண்டு, கதவை சாத்த சொல்லி சபரிராஜன் கையால் நண்பர்களுக்கு சைகை காட்டுகிறார். பின் அந்த பெண்ணின் ஆடைகளை கலைக்க முயன்ற போது அந்த மாணவி கதறி அழுகிறார். அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த மாணவி அழுது கொண்டே கதறுகிறார். ‘‘பிரெண்டா நெனச்சு தான, உன்னை நம்பி வந்தேன். நீ என்ன லூசா, என்ன விட்ரு, நீ இப்படி செய்யலாமா, என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது’’ என கூறி கதறி அழுகிறார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை (இதை எல்லாம் வீடியோவாக எடுக்கும்படி சபரிராஜன் சைகை காட்டுகிறார்). அப்போது சபரிராஜன், ‘‘ உன்ன பாத்துட்டு தான் கேட்கிறேன், பேண்ட கழட்டு, ’’ என்கிறார். அவர் ஆடைகளை பலவந்தமாக பிடித்து இழுக்கும் காட்சிகளும், அந்த நேரத்தில், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் உள்ளே வரும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அதுபோல் மற்றொரு வீடியோவில், ஒரு பெண்ணை திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்துகின்றனர். அப்போது அந்த பெண், “அடிக்காதீங்கண்ணா, நானே கழட்டிறேன், ரொம்ப வலிக்குது… என்ன விட்டுருங்கண்ணா’’ என சொல்லி அந்த கும்பலிடம் கதறுவது கல் நெஞ்சு உள்ளவரையும் பதற வைக்கிறது. இந்த மாணவி யார் என போலீசார் விசாரிக்கவில்லை. இந்த வீடியோவில் உள்ள மாணவி தொடர்பான தகவல்களை தெரிவிக்க போலீசார் மறுத்து வருகின்றனர். திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருந்த போதிலும் அதை மூடி மறைக்க வெளிப்படையாக முயற்சி எடுப்பதாக தெரியவந்துள்ளது.


தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீண் (20) கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதி சொகுசு காரில் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். பெருமாநல்லூர் ஒதியூர் பிரிவில் கார் வந்த போது சாலையின் சென்டர் மீடியனில் மோதியது. இதில் காரை ஓட்டிய பிரவீண் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் இவருடன் வந்த இவரது தோழி சுரேகா (19) படுகாயம் அடைந்து இறந்தார். காரை பிரவீண் ஓட்டியுள்ளார். காரில் பிரவீணின் நண்பர்கள் நெல்சன், திலக் மற்றும் 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர்.

இளம்பெண்களுடன் பிரவீண் காரில் சென்று விபத்து ஏற்படுத்திய விவகாரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதை சாதாரண விபத்து வழக்காக (ஐ.பி.சி 304 ஏ) பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. இதனால் இந்த வழக்கின் விசாரணையை முடக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோவை அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் மெத்தன போக்கை போலீசார் கடைப்பிடித்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆடியோ ஒன்று வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது: நான் மலுமிச்சம்பட்டியில் இருக்கிற என குடும்ப நண்பர்கிட்ட பலாத்கார முயற்சி தொடர்பாக தெரிவிச்சேன். அவர் மூலமாக பொள்ளாச்சி விஐபி கிட்ட உதவி கேட்டோம். அவர் எஸ்.பி கிட்ட பேசி ஆக்சன் எடுக்க சொன்னார். வழக்கு பதிவு செஞ்சு 3 பேரை கைது செஞ்சாங்க. கடைசியா திருநாவுக்கரசை கைது செஞ்சுட்டாங்க.
இந்த விசயத்தால் நானும் எங்க குடும்பத்தினரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். என்னை போல் பாதிக்கப்பட்டவங்களுக்கு தயவு செய்து உதவி பண்ணுங்க. இவ்வாறு அவர் ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோவும் பேஸ்புக்கில் வேகமாக பரவி வருகிறது. இது பாதிக்கப்பட்ட மாணவியின் ஆடியோதானா? வேறு யாராவது இந்த ஆடியோவை வெளியிட்டு வழக்கை திசை திருப்புகிறார்களா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் சிலர் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை சந்தித்து புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன் பரமகுரு கூறுகையில், ‘‘இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் உள்ள மாணவி எனது சகோதரி அல்ல.
ஆனால் அவர், திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்ட வேறு ஒரு பெண் என தெரியவந்துள்ளது. திருநாவுக்கரசு, சபரிராஜன் கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தர முன்வரவேண்டும். யாராவது ஆதாரம் வைத்திருந்தால் போலீசில் ஒப்படைக்கலாம். பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக அதிகளவு தகவல் பகிரப்பட்டு வருகிறது’’ என்றார்.
பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் அரசியல் பாகுபாடு பார்க்காமல் கைது செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் மாரிமுத்து கூறுகையில், ‘‘பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அரசியல் பாகுபாடு இல்லாமல் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். அவர்களை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்’’. என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் பலாத்கார விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோவை அரசுக்கல்லூரி மாணவர்களும், திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முன்வரவில்லை. விசாரித்து விட்டோம், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து விட்டோம், வேறு யாருக்கும் தொடர்பில்லை என போலீசார் வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். சி.பி.சி.ஐ.டி விசாரிக்க, சி.பி.ஐ விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என போலீசார் கைவிரித்து விட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலும் சிலரின் பெயரை கூறி அவர்கள் தான் ‘மெயின் கேங்’. நாங்க சும்மா எனக்கூறியுள்ளனர். முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளை வெளிக்காட்டாமல் தடுக்க 4 பேரை மட்டும் கணக்கு காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
கஸ்டடி எடுத்து விசாரிக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள் உண்மையை கூறினால் அது சிக்கலை ஏற்படுத்தும் என கருதி கஸ்டடியில் எடுக்க போலீஸ் முன்வரவில்லை என கூறப்படுகிறது. பேஸ்புக்கில் வெளியான குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடியோவில், ‘‘ கட்சியில் உள்ளவர்களின் தொடர்புகளை கூறும் காட்சிகள் மறைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசார் சிலர் ‘18 முதல் 20 பேர் இருக்குறாங்க. எல்லாரையும் பிடுச்சா, பயங்கரமான தகவல் வெளியாகும். இது தான் பெரிய ரேப் கேஸா இருக்கும்’’ என தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சியில் மாணவிகளை கடத்தி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு குற்ற எண் 59/2019, புகார் கொடுத்த மாணவியின் சகோதரனை திருநாவுக்கரசின் கூட்டாளிகள் தாக்கிய வழக்கு 60/2019, இந்த 2 வழக்கு தொடர்பான ஆவணங்கள்,சேகரிக்கப்பட்ட தகவல்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசாரிடம் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்படுவதாக உத்தரவு வந்ததையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்க உள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் தெரிவித்தார். வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவது தொடர்பான உத்தரவு ஏதும் இதுவரை வராததால் அதிகாரிகளின் உத்தரவின்படி வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக எஸ்.பி தெரிவித்தார்.
கோவை மாவட்ட எஸ்பியாக இருப்பவர் பாண்டியராஜன். இவர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் 2017ம் ஆண்டு ஏப்ரலில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஒரு பெண்ணை அப்போது ஏடிஎஸ்பியாக இருந்த பாண்டியராஜன் கன்னத்தில் பயங்கரமாக அறைந்தார். அப்போது முதல் அந்த பெண்ணுக்கு காது கேட்கும் திறன் பறிபோய்விட்டது. இந்த சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்தன. அதன்பின்னர் சில நாட்கள், அதிரடிப்படையில் இருந்தவர், பதவி உயர்வுடன் கோவை புறநகர் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
இப்போது அவர்தான், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணையே நடத்தாமல், ஆளும் கட்சி விஐபிக்களுக்கோ, அவர்களது மகன்களுக்கோ தொடர்பு இல்லை என்று கூறியதோடு, வழக்கை மூடி மறைக்கும் விதமாக ஒரு அரசியல்வாதியைப் போல பேட்டி அளித்தார். தற்போது, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்றதால்தான் அது பெரிய அளவில் பூதாகரமாக வெடித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கைதான 4 பேர் மற்றும் தாக்குதல் நடத்திய பார் நாகராஜ் உட்பட 4 பேரின் பேஸ்புக்கில் பல்வேறு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் வழக்கு பதிவு செய்யும் முன்பே இவர்களின் ‘பேஸ்புக் பக்கத்தை’ முடக்கி வைத்தனர். இதில் உள்ள போட்டோ, ‘மெசஞ்சரில்’ பதிவிடப்பட்ட தகவல் நீக்கப்பட்டது. மெசஞ்சரில் சபரிராஜன் பல பெண்களுடன் ‘சாட்டிங்’ செய்து செல்போன் எண்களை பெற்றுள்ளதாக தெரிகிறது. பேஸ்புக் பக்கத்தை முடக்கி ஆதாரங்களை அழித்த போலீசார் ‘பலாத்கார முயற்சி’ என சாதாரணமாக வழக்கை முடிக்க முயன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குற்றவாளிகளின் செல்போனில் இருந்து மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தான் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. மெமரி கார்டுகளை போலீசார் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடாமல் மறைத்து விட்டனர். போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ எங்களிடம் உள்ள ஆதாரங்கள், வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்து விடுவோம், ’’ என்றனர்.

பார் நாகராஜனின் மதுபான விடுதி சூறை:


பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மிரட்டப்பட்டு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கில், புகார் கொடுத்தவர்களின் உறவினர்களை நாகராஜ் மிரட்டியதாகவும் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இந்தப் புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வால்பாறை சாலையில் உள்ள பார் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நாகராஜ் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அந்த பாருக்கு இளைஞர்களும், ஊர் பொதுமக்களும் சென்றனர். ஆவேசத்துடன் இருந்த அவர்கள், மது அருந்திக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றி விட்டு சூறையாடத் தொடங்கினர். இருக்கைகள், மேசைகள் அனைத்தும் வீசி எறிந்த அவர்கள், குளிர்சாதனப் பெட்டியையும் நொறுக்கினர்.
இதைக் கண்ட மதுக்கடை ஊழியர்கள், உடனடியாக கடையை இழுத்து மூடினர். பின்னர், இளைஞர்களும், பொதுமக்களும், பார் நாகராஜை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். நாகராஜை விட மாட்டோம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button