தமிழகம்

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க.. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவரின் அறிக்கை.


கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது சம்பந்தமாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா M.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது…..

இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் நாம் அனைவருமே முன்ஜாக்கிரதையாக செயல்பட வேண்டிய ஒரு தருணத்தில் இருக்கின்றோம். இப்பொழுது பரவலாக பரவிக் கொண்டிருக்கின்ற கருத்து என்னவென்றால், கொரோனா நோயாளி உள்ளே வந்தால், அந்தப் பகுதியே பாதிப்புக்குள்ளாவதாக ஒரு செய்தி நிலவுகிறது. அது உண்மையும் கூட. இருப்பினும் இதை தீர்க்கமாக ஆராய்ந்து பார்த்தோமேயானால், இது தனி மனித ஒழுக்க வரைமுறைகளுக்கு உட்பட்டு நாம் இதை புறந்தள்ள முடியும் என்கின்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது.

நாம் எந்த அளவுக்கு தனி மனித சுத்தத்தை பேணிக் காக்கின்றோமோ, அந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்கின்ற ஒரு கருத்தின் அடிப்படையில்தான் இதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

முதலாவதாக காலை, மாலை இரு வேளைகளிலும் சுடுநீரில் உப்பும், மஞ்சளும் சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இதன் அவசியம் என்ன என்பதன் அறிவியல் காரணம் என்னவென்றால், உப்பு என்பது படிக வடிவத்தில் தான் இருக்கும், அது தண்ணீரில் கரைந்த பிறகும், நமக்கு உப்பு கரைந்த தண்ணீராகத் தெரிந்தாலும், நாம் நுண்ணோக்கியில் பார்க்கும் போது அது படிக வடிவிலேயேதான் இருக்கும். நாம் வாய் கொப்பளிக்கும் போது நம்முடைய வாயிலிருந்து தொண்டை வரைக்கும் இந்தப் படிக வடிவம் படிந்திருக்கும். அப்போது, வாய் வழியாக எந்த ஒரு வைரஸ்-ம் உள்ளே செல்லும் போது வைரஸின் மெல்லிய சவ்வு உடைந்து விடுகின்றது என்றுதான் அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படி உடையும் பொழுது அந்த வைரஸ் சமநிலை பெற்று விடுகிறது. ஆகையால், தினமும் நாம் காலை, மாலை இரு வேளைகளும் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டால், வாய் வழியாக வைரஸ் செல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

இரண்டாவதாக, நம்முடைய நாசித் துவாரம் வழியாக வைரஸ் பரவும் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. அதனால், ஒரு சொட்டு தேங்காய் எண்ணையை, நாம் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகளுமே நாசித்துவாரத்தில் பூசிக் கொண்டாலே, தேங்காய் எண்ணையில் இருக்கின்ற லாரிக் அமிலம் வைரஸை தடுக்கக் கூடிய ஒன்று, (Anti-Virus). வைரஸ் தேங்காய் எண்ணையில் படும்போது அதில் இருக்கக் கூடிய லாரிக் அமிலம் அதை கரைத்து விடும். அதனால் நாம் இந்த முறையிலும் வைரஸ் தோற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.

ராஜா M.சண்முகம், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

மூன்றாவதாக, நாம் தினமும் ஒருமுறை ஆவி பிடித்தல் என்ற முறையை பின்பற்றும் போது நம்முடைய நுரையீரல் வரை சுத்தப்படுத்தி விடுகிறது.

இந்த மூன்று வழிமுறைகளையும் எல்லோரும் கடைபிடிக்கும்போது, தனி மனித சுத்தம் உத்திரவாதம் ஆகிறது. இதை எல்லோரும் கடைபிடிக்கும் போது எந்த ஒரு இடத்திலும் கொரோனாவே இல்லை என்ற அளவுக்கு விரைவாக நாம் இதற்கு ஒரு முடிவைக் கொண்டுவர முடியும் என்பது தான் இதனுடைய புரிதல்.

ஆகையால், நாம் மட்டுமல்லாது நம்மைச் சார்ந்தவர்கள் அனைவரையும் இந்த எளிய முறையை செயல்படுத்த வைத்தோமானால், கொரோனா என்பது வெகு விரைவில் இந்தியாவிலிருந்து விரட்டி அடிக்கப்படும் குறிப்பாக திருப்பூரிலிருந்து விரட்டி அடிக்கப்படும் என்ற ஒரு செய்தியை சொல்ல இந்த முயற்சியை நான் எடுத்திருக்கின்றேன். தயவு செய்து உங்களுடைய நண்பர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து எல்லோரும் விரைவாக இதிலிருந்து விடுபட்டு நம்முடைய முக்கியப் பணியில் நம்மை ஈடுபடுத்துவோமாக என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button