உச்சத்தில் கொரோனா…அச்சத்தில் திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை ஏற்றுமதி துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி வரை அன்னிய செலவானியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் உழைக்கும் தொழிலாளர்களின் முழு ஒத்துழைப்பினால் சர்வதேச அளவில் பின்னலாடை துறையில் வெற்றிகொடி நாட்டி வரும் திருப்பூரில் சுமார் பத்து லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலை நம்பி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றன்ர்.
இந்நிலையில் கடந்தாண்டு கொரானா பரவலின் காரணமாக வெளியூர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். சென்ற முறை கொரானா கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய நிறுவனங்கள் இயங்கவும், தொழிலாளர்களை அழைத்து வரும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கடும் கட்டுப்பாடுகளுடனும், கண்காணிபுடன் இயக்கப்பட்டன. இதனால் கொரானாவின் தாக்கம் குறைந்து நிலமை கட்டுக்குள் வருவதற்குள் தற்போது பரவி வரும் இரண்டாவது கொரானா அலை திருப்பூர் தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் இது வரை இல்லாத அளவில் திருப்பூரில் 755 பேருக்கு கொரானா தொற்று புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதராமாக திகழ்ந்து வரும் விசைத்தறி தனது இயக்கத்தை நிறுத்தி அரசின் முழு ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பின்னலாடை துறையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக அறிவித்துள்ள அறிவிப்புக்கள் என்ன என்பதே தொழிலாளர்ககுக்கு தெளிவு படுத்தவில்லை. நிறுவனங்களை இயக்குவதிலேயே முழு மூச்சுடன் செயல்படும் தொழில் துறையினர் இது போன்று கொரானா தொற்று காலங்களில் தொழிலாளர் நலனிலும் அக்கரை கொள்ளவேண்டும் என்பதே தொழிலாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும் வெளிநாட்டு வர்த்தகர்க்ளுக்கு குறித்த நேரத்தில் பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பதை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுத்துவது போல் தொழிலாளர்களுக்கு கொரானா தொற்று காலங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நிறுவன நிழைவாயிலில் மேற்கொள்ளப்படும் சோதனையில் பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிப்பதோடு, வாழ்வாதாரம் பாதிக்கபடாத வண்ணம் நிவாரணம் வழங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொரானா தடுப்பு பணியில் தற்போது பதவியேற்றுள்ள அரசு முழு வீச்சில் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் தொழில் துறையினரும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் பதிவுகளை போல் திருப்பூர் தொழிலாளர்களுக்கு போதி தர்மரின் மரபணுக்கள் கண்டறியப்பட்டது போல் தொற்று ஏற்படாது என நினைத்து செயல்படுவதை விடுத்து தொழிலாளர்களின் அடையாள அட்டை, போக்குவரத்து மட்டுமே தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாது, நிறுவன வளாகங்களில் தொற்று ஏற்படாத வண்ணம் அரசு கண்காணிப்பு குழுக்களை அமைத்து தொழில்சாலைகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நின்று கொரானாவை வென்று திருப்பூரின் பின்னலாடை துறையை வென்றெடுப்போம்.
நமது நிருபர்.