குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குப்புசாமிநாயுடு புரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ் செல்வி. இவருக்கும் பிரபு என்பவருக்கும் திருமணமாகி பிருந்தா (வயது 7), பிரசந்தா( வயது 4) என்கிற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேலும் குடும்ப தகராறு காரணமாக கணவர் பிரபுவை பிரிந்து தமிழ் செல்வி தனது குடும்பத்தாருடன் குப்புசாமி நாயுடு புரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தமிழ் செல்வியின் வீட்டார் பிரபுவுடன் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். இதற்கு தமிழ் செல்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக மனமுடைந்து இருதினங்களூக்கு முன் எலி மருந்தை தமிழரசி தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் தற்கொலை முயற்சி தோல்வியடைந்ததால் மறுபடியும் எலி மருந்தை அளவுக்கதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டுள்ளார். இந்நிலையில் பிருந்தா மற்றும் பிரசந்தா ஆகிய இரு குழந்தைகளுடன் தமிழ்செல்வியும் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்ட குடும்பத்தினர் விசாரித்தபோது தான் எலி மருந்தை உட்கொண்டது தெறிய வந்தது.இதனை அடுத்து மூவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் பிருந்தா மற்றும் பிரசந்தா ஆகிய இரு குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ்செல்வி சிகிச்சை பெற்று வரும் நிலையில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பதகராறில் ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது நிருபர்.