அரசியல்

கொள்கை அரசியலா ? சுயநல அரசியலா ? கொதிக்கும் பாஜக நிர்வாகிகள்…..;

தமிழக அரசியலில் முன்பெல்லாம் கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு அரசியல் பணியாற்றினார்கள். ஆனால் சமீபகாலமாக தங்களின் சுயநலத்திற்காக அடிக்கடி கட்சி மாறுவது நவீன நாகரிகம் என்பது போல் ஆகிவிட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதிமுக வில் இருந்து விலகி திமுக வில் இணைந்தார் . திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக வைச் சேர்ந்த போஸ் இறந்த காரணத்தினால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியை திமுக அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. அதனால் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டார்.

பாஜகவில் இணைந்த சில மணிநேரத்தில் அதே திருப்பரங்குன்றம் தொகுதியை சரவணனுக்கு ஒதுக்கியது பாஜக தலைமை. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த பாஜக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டனி கட்சியினர் சரவணனுக்கு எதிராக வேலை பார்த்தோம், இப்போது இவருக்காக எப்படி வேலை பார்க்க முடியும் ? நேற்று வரை மதவாதத்தை எதிர்த்து பேசிய சரவணன் மாதவாதத்தை தூக்கிப் பிடித்து பேசத் துணிந்தது கொள்கைக்கான அரசியலா ? சுயநலத்திற்கான அரசியலா ? என்று அப்பகுதி அதிமுக கூட்டனி கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேபோல் நடிகை குஷ்பூ கடந்த காலங்களில் திமுக , காங்கிரஸ் என பயணம் செய்து தனது கணவனை காப்பாற்றுவதற்காக பாஜகவில் இணைந்தார். அவருக்கும் தற்போது ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

இந்த தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர எல்லா வேட்பாளர்களும் சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்கள் தான். இது சம்பந்தமாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியே இணைய தளத்தில் தெளிவாக பதிவிட்டுள்ளார்

பல வருடங்களாக பாஜகவில் கொள்கை ரீதியாக உழைக்கும் தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் புதியதாக சேர்ந்தவர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கினால் பல ஆண்டுகளாக கட்சிக்காக பாடுபட்ட சாமானியர்கள் கட்சிபணியாற்ற மட்டும்தானா? பாஜகவில் சாமானியரும் உயர் பதவியில் அமரலாம் என்று கூறுவது வெறும் வாய் வார்த்தைகள் தானா ? என்று புலம்புகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button