பழனிச்சாமி சிறை செல்வாரா…?
அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்ட தொகுதிகளை வழங்காததால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுகவினர் பாமக வினருக்கு கொடுத்த முக்கியத்துவம் தேமுதிக வினருக்கு வழங்கப் படவில்லை , அதிமுக வின் கே.பி. முனுசாமி பாமக வின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டாக தேமுதிக வின் துணைப் பொதுச் செயலாளர் சுதிஷ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கடலூர் மாவட்டத்தில் கட்சிக் கூட்டத்தில் பேசும் போது அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் தேமுதிக தொண்டர்கள் தமிழகம்முழுவதும் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். வரும் தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்து ஜெயலலிதாவைப் போல் முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி.எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமியை படுதோல்வியடைய வைத்து தேமுதிக தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இது சம்பந்தமான விரிவான செய்தி வரும் இதழில்…..